Photo of Potato keerai gravy/kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
544
5
0.0(1)
0

Potato keerai gravy/kuttu

Jan-23-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 1 கப் ( பொடியாக நறுக்கியது )
  2. கீரை - 1 கப் ( பொடியாக நறுக்கியது )
  3. பாசிப்பருப்பு - 2 மேஜைகரண்டி
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  6. அரைக்க :
  7. தேங்காய் துருவல் - 2 மேஜைகரண்டி
  8. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  9. மிளகு - 1 / 2 தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் - 2
  11. பெருங்காயம் - 4 சிட்டிகை
  12. தாளிக்க
  13. கடுகு - 1 தேக்கரண்டி
  14. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  16. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை நறுக்கி இரண்டு நிமிடங்கள் கொதிக்கும் வெந்நீரில் போட்டு பின்னர் வடிகட்டிக்கொள்ளவும்
  2. பாசிப்பருப்பை மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்
  3. அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்து அரைக்கவும்
  4. கீரையை அலம்பி பொடியாக நறுக்கி தனியே வேக வைக்கவும்
  5. கீரை நன்றாக வெந்ததும் ஏற்கனவே வெந்நீரில் போட்டு எடுத்த உருளைக்கிழங்கு வேக வைத்த பாசிப்பருப்பு அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்
  6. செமிசாலிட் பதம் வந்ததும் இறக்கி விடவும்
  7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும் சுவையான உருளைக்கிழங்கு கீரை கிரேவி / கூட்டு தயார். சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Jan-30-2018
Sukhmani Bedi   Jan-30-2018

Really good and well explained

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்