BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Potato Soup

Photo of Potato Soup by Asiya Omar at BetterButter
1
4
4.5(2)
0

Potato Soup

Jan-23-2018
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்து பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு-1/2 கப்
  2. துருவிய கேரட் - கால் கப்
  3. எண்ணெய் -2 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - 1
  5. நறுக்கிய சிறிய பச்சை மிளகாய் -1
  6. நறுக்கிய பூண்டு பற்கள் -2
  7. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  8. சூப் கியூப் -1
  9. மிளகுத்தூள் ,உப்பு - சுவைக்கு.
  10. சோயா சாஸ் -1 தேக்கரண்டி
  11. வெள்ளை வினிகர் - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் தயார் செய்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.நறுக்கிய பச்சை மிளகாய்,பூண்டு,வெங்காயம் தாளிக்கவும்.
  3. அடுத்து பொடியாக நறுக்கிய வேக வைத்த உருளைக்கிழங்கு,கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
  4. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர் இரண்டு கப் சேர்க்கவும்.
  5. சூப் கியூப் சேர்க்கவும்.
  6. கொதி வரவும் மூடி அடுப்பை குறைவாக சிம்மில் வைத்து விடவும்.
  7. நன்கு சூப் கொதித்து தாயாராகி வரும்.மிளகு பொடித்து சேர்க்கவும்.
  8. உருளை நன்கு மசிந்து வரும்.
  9. சோயா சாஸ் வினிகர் சேர்க்கவும்.
  10. நறுக்கிய மல்லி இலை சேர்த்து உப்பு சரி பார்க்கவும்.சூப் கியூப்பில் உப்பு இருக்கும்.தேவைபட்டால் சிறிது சேர்க்கவும்.
  11. தயாராகி விட்டது.பெரிய பவுலில் விட்டு வைக்கவும்.
  12. தேவைக்கு சூப் பவுலில் பரிமாறவும்.ப்ரெட் ஸ்டிக் அல்லது ப்ரெட் டோஸ்ட் உடன் பருக சூப்பராக இருக்கும்.
  13. சுவையான உருளைக்கிழங்கு சூப் தயார்.சத்தானது.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Diksha Wahi
Feb-06-2018
Diksha Wahi   Feb-06-2018

Nice and useful recipe for me

Pushpa Taroor
Jan-23-2018
Pushpa Taroor   Jan-23-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்