Photo of Potato Thattai by Krishnasamy Vidya Valli at BetterButter
375
5
0.0(1)
0

Potato Thattai

Jan-23-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Potato Thattai செய்முறை பற்றி

தட்டை எல்லோருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் வெரைட்டி. அதை உருளைகிழங்கை வைத்தும் செய்யலாம். அருமையான சுவையுடன் இருக்கும் ஒருவருக்கு இரண்டு தட்டை வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு - 1
  2. அரிசி மாவு - 1 / 2 கப்
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 4 சிட்டிகை
  6. வெண்ணெய் - 1 மேஜைகரண்டி
  7. பொரிகடலை /கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட பொருட்கள் ( எண்ணெய் தவிர ) சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  3. நன்றாக பிசைந்து வைக்கவும் தண்ணீர் தேவையில்லை வேண்டும் என்றால் சிறிது தெளித்து கொள்ளலாம்
  4. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. பட்டர் பேப்பர் /பாலிதீன் பேப்பர் -ல் தட்டையாக தட்டிக்கொள்ளவும் ரொம்ப லேசாக தட்ட வேண்டாம். எண்ணெய்யில் போடும் போது பிய்ந்து விட வாய்ப்பு அதிகம்.
  6. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தட்டையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளவும்
  7. சுவையான தட்டை தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-24-2018
Pushpa Taroor   Jan-24-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்