வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ரவை பான்கேக்

Photo of Potato Rava Pancakes by Krishnasamy Vidya Valli at BetterButter
342
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு ரவை பான்கேக்

Jan-23-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ரவை பான்கேக் செய்முறை பற்றி

வீட்டில் காலையில் செய்த உருளைகிழங்கு வெங்காயம் கறி மீதமாகி விட்டதா? நோ ப்ராப்ளம். குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது அருமையான இந்த பான் கேக் செய்து அசத்தலாம் . ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு வெங்காயம் சேர்த்து செய்த கறி- 1/ 2 கப்
  2. ரவை - 1 / 2 கப்
  3. தயிர் - 1 / 2 கப்
  4. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  5. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  6. எண்ணெய் - 2 முதல் 3 தேக்கரண்டி (தோசை கல்லில் விடுவதற்கு )

வழிமுறைகள்

  1. ரவை தயிர் உப்பு சேர்த்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. அதோடு கொத்தமல்லி இலை மற்றும் உருளைக்கிழங்கு வெங்காயம் கறியை சேர்க்கவும்
  3. நன்றாக கலந்து கொள்ளவும்
  4. தோசைகல்லில் சிறுசிறு ஊத்தப்பமாக விடவும் மாவு ரொம்ப கெட்டியாக இருந்தால் பாலிதீன் கவரில் தட்டி தோசைகல்லில் போடலாம். செமிசாலிட் ஆக இருந்தால் கரண்டியால் விடலாம்
  5. சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும்
  6. பொன்னிறமானதும் எடுத்து சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்