வீடு / சமையல் குறிப்பு / Sprouts stuffed potato cups in gravy

Photo of Sprouts stuffed potato cups in gravy by Sowmya Sundar at BetterButter
75
4
0.0(1)
0

Sprouts stuffed potato cups in gravy

Jan-24-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • இந்திய
 • ஷாலோ ஃபிரை
 • பிரெஷர் குக்
 • ஸாட்டிங்
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. உருளைக்கிழங்கு -6
 2. வெங்காயம் -2
 3. தக்காளி -3
 4. இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்
 5. மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன்
 6. மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
 7. மல்லி தூள் -1 டீஸ்பூன்
 8. கரம் மசாலா தூள்-1 டீஸ்பூன்
 9. ப்ரஷ் க்ரீம் /பால் -2 டேபிள் ஸ்பூன்
 10. சர்க்கரை -1/4 டீஸ்பூன்
 11. கஸ்தூரி மேத்தி -1/4 டீஸ்பூன்
 12. கொத்தமல்லி தழை சிறிது
 13. சீரகம்-1டீஸ்பூன்
 14. ஸ்டப்பிங் செய்ய.
 15. கலந்த முளைக்க வைத்த பயறு வகைகள் -1/2 கப்
 16. பச்சை மிளகாய் விழுது -1டீஸ்பூன்
 17. வெங்காயம் 1/4கப்
 18. தக்காளி-1
 19. உப்பு
 20. மிளகு தூள்-1/2 டீஸ்பூன்
 21. எலுமிச்சை சாறு 1டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. குக்கரில் முளைத்த பயறு வகை பச்சைபயறு,கொண்டகடலை, கொள்ளு போன்ற விருப்பமானவற்றை சேர்த்து ஒரு விசில் வரை வேக விடவும்.
 2. உருளைக்கிழங்கையும் சிறிது உப்பு சேர்த்து குழையாமல் வேக விட்டு தோல் நீக்கி விடவும் பின் உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி நடுவில் உள்ளதை ஸ்பூனால் எடுத்து விட்டு படத்தில் உள்ளது போல் கப் மாதிரி செய்து கொள்ளவும்
 3. கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பச்சை மிளகாய் விழுது சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும். பின் அதில் வேக வைத்த பயறு மற்றும் ஸ்கூப் செய்து எடுத்த மீதி உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். உப்பு மற்றும் மிளகு தூள், எலுமிச்சை சாற்றை கலந்து இறக்கவும்.ஸ்டப்பிங் தயார்.
 4. கடாயில் சிறந்த எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் வதக்கியதை ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
 5. கப் செய்த உருளைக்கிழங்கில் பயறு ஸ்டப்பிங்கை அடைத்து கொள்ளவும்.
 6. மைதா மாவை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து கொள்ளவும். அதை ஸ்டப் செய்த உருளைக்கிழங்கின் மேல் நன்றாக தடவி சீல் செய்து அதை கடாயில் எண்ணெய் விட்டு உருளையின் மேல் சீல் செய்த பாகம் எண்ணெயில் படும்படி தலைகீழாக அடுக்கி ஷாலோ ப்ரை செய்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
 7. அதே எண்ணெயில் சீரகம் தாளித்து அரைத்த வெங்காய தக்காளி விழுதை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
 8. பின் அதில் பால் அல்லது ப்ரெஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
 9. கடைசியில ஸ்டப் செய்த உருளைக்கிழங்கு சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு கஸ்தூரி மேத்தி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-24-2018
Pushpa Taroor   Jan-24-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்