Photo of Omeletta by jai bedi at BetterButter
2522
242
4.3(0)
0

ஆம்லேட்

Jul-27-2015
jai bedi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தினமும்
  • கிரேக்க
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2-3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  2. 200 கிராம் நறுக்கிய காளான்
  3. 1-2 பூண்டு பற்கள் நசுக்கியது (விருப்பம்)
  4. 300 கிராம் பசலிக்கீரை அலசி நறுக்கியது
  5. 6 முட்டைகள்
  6. 2 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள்
  7. 1/2 கப் வெங்காயம் நறுக்கியது
  8. 2 தேக்கரண்டி பால்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. காளானை மிருதுவாகும்வரை வதக்கவும்.
  2. உப்பு, மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
  3. பசலிக்கீரை சேர்த்து கூடுதல் தண்ணீரை ஆவியாக்கி வெளியேற்றவும். அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறும்வரை வதக்கவும்.
  4. முட்டைகளை ஒரு கிண்ணத்தில் அடித்து, பாலைச் சேர்க்கவும். பசலிக்கீரை, காளான் கலவையை முட்டையில் சேர்க்கவும்.
  5. தட்டையான ஒரு தவாவைச் சூடுபடுத்துக. தவா தயாராக இருக்கும்போது, முட்டைக் கலவையை ஊற்றவும். தவாவில் முட்டை சமமாக பரவுவதற்கு தவாவைச் சற்றே சாய்க்கவும். மிதமானச் சூட்டில் 3-5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. ஒரு பக்கம் வெந்ததும், ஆம்லேட்டின் விளிம்புகளை தளர்த்தி கவனமாகத் திருப்பிப் போடவும். இப்போது அடுத்த பக்கத்தை 2-3 நிமிடங்கள் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
  7. ஆம்லேட்டை ஓவனில் 2-3 நிமிடங்கள் மேல் பக்கம் பொன்னிறமாகும்வரை வேகவைக்கவும்.
  8. முக்கோணமாக வெட்டி சூடாகப் பரிமாறவும்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்