வீடு / சமையல் குறிப்பு / மசித்த உருளைக்கிழங்கு கோன்கள்

Photo of Mashed Potato Cones by Hameed Nooh at BetterButter
368
7
0.0(0)
0

மசித்த உருளைக்கிழங்கு கோன்கள்

Jan-24-2018
Hameed Nooh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசித்த உருளைக்கிழங்கு கோன்கள் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மசித்து மாவு கோன்களில் நிரப்பப்படும் ஒரு இலகுவான சமையல் முறை குழந்தைகளின் பார்ட்டி போன்றவற்றில் தயாரித்து பரிமாறலாம்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மசித்த உருளைக்கிழங்கு செய்ய:
  2. உருளைக்கிழங்கு - 2
  3. நறுக்கிய பூண்டு - 1 தேக்கரண்டி
  4. க்ரீம் - 1/2 கப்
  5. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  6. உப்பு - சுவைக்கேற்ப
  7. கோன்கள் செய்ய :
  8. மைதா - 1 கப்
  9. வெள்ளை எள் - 1 மேசைக்கரண்டி
  10. உருக்கிய நெய் - 2 மேசைக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கேற்ப
  12. எண்ணெய் - பொரிக்க

வழிமுறைகள்

  1. மாவில் எள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து சூடான நெய்யை ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பிறகு மாவை நீண்ட கயிற்றை போல் வளர்த்து கூம்பு வடிவில் உள்ள அச்சில் சுற்றவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி மைதா கோன்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் க்ரீமுடன் நறுக்கிய பூண்டு சேர்த்து குறைந்த தணலில் இரண்டு நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. உருளைக்கிழங்கு தோல் நீக்கி வேக வைத்து அதனுடன் வேக வைத்த க்ரீம் மற்றும் உப்பு சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  6. பிறகு அதனோடு மிளகுத்தூளை சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
  7. மசித்த உருளைக்கிழங்கை பைப்பிங் குடுவை அல்லது பையில் நிரப்பவும்.
  8. இனி அதனை அச்சிலிருந்து நீக்கிய கூம்புகளில் நிரப்பினால் சுவையான மசித்த உருளைக்கிழங்கு கோன்கள் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்