Photo of Potato Poha Nuggets by Krishnasamy Vidya Valli at BetterButter
415
8
0.0(1)
0

Potato Poha Nuggets

Jan-24-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 1
  2. அவல் - 2 மேஜைகரண்டி
  3. வெங்காயம் - 1
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி + 1 சிட்டிகை
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  8. தனியாபொடி-2சிட்டிகை
  9. சீரக பொடி - 2 சிட்டிகை
  10. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  11. கஸூரிமேத்திடிரைலீவ்ஸ்-2தேக்கரண்டி
  12. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  13. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  14. மிளகு பொடி - 1 சிட்டிகை
  15. தாளிக்க சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  16. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  17. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  18. டீப்ப்ரை அல்லது ஷாலோபிரை செய்வதற்கு தேவையானஅளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. அவலை மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும் . பாதியை தனியா எடுத்து வைக்கவும். மீதியை சிறிது நைஸாக திரிக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  5. வேகவைத்த உருளைக்கிழங்கு கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் (மிளகு பொடி தவிர ) சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. கொத்தமல்லி இலை மற்றும் நைஸாக திரித்த அவலை சேர்த்து ஸிலிண்டர் ஷேப்பில் உருட்டி வைக்கவும் . கான்பிளவரில் இரண்டு தேக்கரண்டி தண்ணீர் ஒரு சிட்டிகை உப்பு ஒரு சிட்டிகை மிளகு பொடி சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  7. உருட்டி வைத்ததை கான்பிளவர் கரைசலில் டிப் செய்து எடுக்கவும்
  8. பின்னர் கரகரப்பாக திரித்த அவல் பொடியில் பிரட்டி எடுக்கவும்
  9. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். டீப் ப்ரை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. ஷாலோபிரை கூட செய்யலாம்
  10. சாஸுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sukhmani Bedi
Jan-30-2018
Sukhmani Bedi   Jan-30-2018

Very very well made. Sure the taste is awesome

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்