வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு முறுக்கு

Photo of Potato Murukku by Banupriya Jawahar at BetterButter
833
7
0.0(0)
0

உருளைக்கிழங்கு முறுக்கு

Jan-24-2018
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு முறுக்கு செய்முறை பற்றி

மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த முறுக்கு!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. முறுக்கு மாவு தயாரிக்க:
  2. பச்சரிசி 1 கிலோ
  3. முழு பொரிகடலை 1/4 கிலோ
  4. முழு உளுத்தம் பருப்பு 1/4 கிலோ
  5. முறுக்கு பிழிய:
  6. முறுக்கு மாவு 1 கப்
  7. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 2
  8. எள் 1/2 தேக்கரண்டி
  9. மிளகுத்தூள் 1/2 தேக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. நெய் 1/2 தேக்கரண்டி
  12. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் முழு உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
  2. பச்சரிசி, வறுத்த முழு உளுத்தம் பருப்பு, முழு பொரிகடலை இவற்றை கலந்து மிஷினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும்.
  3. இப்பொழுது முறுக்கு மாவு ரெடி
  4. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
  5. ஒரு கப் முறுக்கு மாவுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, எள், மிளகுத்தூள், நெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையவும்
  6. பிசைந்த மாவை முறுக்கு குழலில் இட்டு பிழியவும்.
  7. சுவையான உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்