வீடு / சமையல் குறிப்பு / ஆலு மட்டர் சப்ஜி

Photo of Aloo mutter sabji by Krishnasamy Vidya Valli at BetterButter
450
4
0.0(0)
0

ஆலு மட்டர் சப்ஜி

Jan-24-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆலு மட்டர் சப்ஜி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து செய்யப்படும் டிரை சப்ஜி இது . சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் வகை இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. பச்ச பட்டாணி - 2 மேஜைகரண்டி
  3. வெங்காயம் - 1
  4. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  7. மஞ்சள் பொடி - 3 சிட்டிகை
  8. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  9. தனியா பொடி - 2 சிட்டிகை
  10. சீரக பொடி - 2 சிட்டிகை
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  12. தாளிக்க சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 / 4 தேக்கரண்டி
  14. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  15. பச்ச மிளகாய் - 1
  16. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  17. பட்டை - 1 சிறிய துண்டு
  18. கருவேப்பிலை-1ஆர்க்கு

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கி விட்டு அதோடு பச்ச பட்டாணி சிறிது தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் 2 நிமிடங்கள் வேகவைக்கவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. உருளைக்கிழங்கு பச்ச பட்டாணி மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்