வீடு / சமையல் குறிப்பு / Potato stuffed Instant Kuzhi Panniyaram

Photo of Potato stuffed Instant Kuzhi Panniyaram by Krishnasamy Vidya Valli at BetterButter
311
5
0.0(1)
0

Potato stuffed Instant Kuzhi Panniyaram

Jan-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. மசாலாவிற்கு தேவையானவை :
  2. உருளைக்கிழங்கு - 2
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா, ஆம்சூர் பவுடர், தனியா பொடி ,சீரக பொடி, பெருங்காயம் - தலா 3 சிட்டிகை
  6. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1தேக்கரண்டி
  7. குழிப்பணியார மாவிற்கு தேவையானவை
  8. தோசை மாவு - 1 / 4 கப்
  9. மல்டி கிரன் மாவு - 1 / 8 கப்
  10. ரவை - 1 / 8
  11. லேஸ் அவல் - 1 / 8 கப்
  12. தயிர் - 1 / 4 கப்
  13. தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  14. சீரகம்-1/4தேக்கரண்டி
  15. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  16. உப்பு-1/2தேக்கரண்டி
  17. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி
  18. உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  19. கடலைப்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  20. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  21. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  22. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 2 மேஜைகரண்டி
  23. இஞ்சி-1சிறியதுண்டு(விருப்பப்பட்டால்)
  24. பச்ச மிளகாய் - ( விருப்பப்பட்டால் )
  25. குழிப்பணியார கடாயில் விடுவதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். அதோடு மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்கள் சேர்த்துக் கொள்ளவும்
  2. நன்றாக பிசைந்து வைக்கவும்
  3. மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும் . செமிசாலிட் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  5. அதை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. குழிப்பணியார கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பாதியளவு மாவு விட்டு செய்து வைத்த மசாலாவில் சிறிது எடுத்து அதன் மேல் வைக்கவும்
  7. மறுபடியும் மேலே மாவு விடவும்
  8. ஒரு புறம் பொன்னிறமானதும் திருப்பி கொடுக்கவும்
  9. இறுபுறமும் பொன்னிறமானதும் எடுத்து சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-25-2018
Pushpa Taroor   Jan-25-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்