வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு மினி பூரி

Photo of Potato stuffed Mini Puri by Krishnasamy Vidya Valli at BetterButter
381
7
0.0(0)
0

உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு மினி பூரி

Jan-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு மினி பூரி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது . ஒருவருக்கு நான்கு வீதம் இரண்டு பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1
  2. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 2 சிட்டிகை
  6. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
  7. தனியா பொடி, சீரக பொடி , ஆம்சூர் பவுடர் - தலா 1 சிட்டிகை
  8. கான்பிளவர் - 1 தேக்கரண்டி
  9. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் - 1 தேக்கரண்டி
  10. தாளிக்ககடுகு-1/4தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  12. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  13. மாவிற்கு தேவையானவை
  14. கோதுமை மாவு - 1 / 2 கப்
  15. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  16. ரவை - 2 தேக்கரண்டி
  17. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயம் போட்டு வதக்கியபின் வேகவைத்த உருளைக்கிழங்கு போட்டு எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. மாவிற்கு கொடுத்தவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்
  4. சப்பாத்தி போல் இட்டு மினி பூரி போல் கட் செய்து வைக்கவும்
  5. ஒரு பூரி மீது செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்
  6. மற்றொரு பூரியால் மூடி ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டி விடவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். விருப்பப்பட்டால் ஷாலோ பிரை கூட செய்யலாம்
  8. தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்