வீடு / சமையல் குறிப்பு / பேபி ஆலு டிரை கலர் கேப்ஸிகம் (நோ ஆனியன் நோ கார்லிக் டிரை சப்ஜி )

Photo of Baby Aloo tricolour capsicum ( no onion no garlic dry sabji) by Krishnasamy Vidya Valli at BetterButter
396
4
0.0(0)
0

பேபி ஆலு டிரை கலர் கேப்ஸிகம் (நோ ஆனியன் நோ கார்லிக் டிரை சப்ஜி )

Jan-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பேபி ஆலு டிரை கலர் கேப்ஸிகம் (நோ ஆனியன் நோ கார்லிக் டிரை சப்ஜி ) செய்முறை பற்றி

பேபி உருளைக்கிழங்கு மற்றும் மூன்று நிற குடைமிளகாய் வைத்து செய்யும் நோ கார்லிக் நோ ஆனியன் வகையை சேர்ந்த சப்ஜி /கறி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேபி உருளைக்கிழங்கு - 15
  2. குடைமிளகாய் - மூன்று நிறங்களிலும் சேர்த்து -பொடியாக நறுக்கியது - 1 கப்
  3. உப்பு - 1 / 2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  6. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. சீரக பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. மிளகு பொடி - 1 / 4 தேக்கரண்டி
  9. மஞ்சள்பொடி-2சிட்டிகை
  10. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  12. தாளிக்க சீரகம் - 1 / 2 தேக்கரண்டி
  13. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 2 சிட்டிகை
  15. பட்டை - 1 சிறிய துண்டு
  16. ஏலக்காய் கிராம்பு - தலா 2

வழிமுறைகள்

  1. பேபி உருளைக்கிழங்கை ஒரு விசில் குக்கரில் வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து உருளைகிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்