பியாஸ் கச்சோரி | Pyaaz Kachori in Tamil

எழுதியவர் Jyothi Rajesh  |  15th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Pyaaz Kachori by Jyothi Rajesh at BetterButter
பியாஸ் கச்சோரிJyothi Rajesh
 • ஆயத்த நேரம்

  2

  1 /2 மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

4055

0

பியாஸ் கச்சோரி recipe

பியாஸ் கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Pyaaz Kachori in Tamil )

 • 2 கப் மைதா
 • 1 டீக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • தேவையான அளவு தண்ணீர்
 • வறுப்பதற்கு தேவையான எண்ணெய்
 • உள்ளே வைப்பதற்க்கான மசாலா:
 • 3 வெங்காயம்
 • 2 பச்சைமிளகாய்
 • 1 டீக்கரண்டி சீரகம்
 • 1 டீக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
 • 1 டீக்கரண்டி கொத்தமல்லி தூள்
 • 1 டீக்கரண்டி மஞ்சள்தூள்
 • 1 டீக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
 • 1 டீக்கரண்டி வறுத்த சீரகம் தூள்
 • 1 டீக்கரண்டி கரம் மசாலா தூள்
 • சுவைகேற்ப உப்பு
 • 1 டீக்கரண்டி எண்ணெய்

பியாஸ் கச்சோரி செய்வது எப்படி | How to make Pyaaz Kachori in Tamil

 1. ஒரு கிண்ணத்தில் மைதா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கலந்துக்கொள்ளவும். பின் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். நெய்/வெண்ணையையும் சேர்த்து மாவை பிணைந்துக் கொள்ளலாம். மாவை 1-2 மணி நேரம் தனியாக மூடி வைத்துக் கொள்ளவும்.
 2. இதற்கிடையில் மசாலாவை தயார் செய்துக் கொள்ளவும். அகலமான கடாயில் எண்ணெய்யை சூடு செய்து சீரகம் சேர்க்கவும். நன்றாக வெட்டப்பட்ட வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
 3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மணம் இல்லாத வரை வதக்கவும்.
 4. அனைத்து மசாலாவையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும். சுவைக்காக உப்பு சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். தீயை அணைத்து விட்டு மசாலாவை ஆற செய்யவும்.
 5. சிறிது மாவை பிணைந்துக் கொண்டு சமமான பகுதிளாக பிரித்துக்கொள்ளவும்.
 6. அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
 7. மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். 3 அங்குல அளவிற்கு வட்டமாக தேய்த்துக் கொள்ளவும். அதில் நடு பகுதியில் மசாலாவை வைத்துக்கொள்ளவும். அனைத்து ஓரங்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மூடிக்கொள்ளவும். இவற்றை 3 அங்குல அளவில் உருட்டிக்கொள்ளவும். பின் தனியாக வைத்துக்கொளவும்.
 8. இதைப் போல் மற்றவற்றையும் செய்துக்கொள்ளவும்.
 9. மிதமான வெப்பத்தில் கச்சோரியை 3 நிமிடம் நன்றாக பொறித்துக் கொள்ளவும். தீயை குறைத்துக் கொண்டு மிதமான வெப்பத்தில் மேலும் 5 நிமிடம் வேகவிடவும். அதில் உள்ள எண்ணெய்யை கிட்சன் பேப்பர் கொண்டு எடுத்துக்கொள்ளவும்.
 10. வெங்காய கச்சோரியை காரமான மசாலாவுடன் உடனடியாக பரிமாறவும். இதனை காரமான கொத்தமல்லி சட்னி மற்றும் இனிப்பு கலந்த புளி சட்னியுடன் பரிமாற சிறந்தது.

Reviews for Pyaaz Kachori in tamil (0)