வீடு / சமையல் குறிப்பு / உருளை-ஆழி விதை மத்ரி

Photo of Potato-Flax seed Mathri by Ayesha Ziana at BetterButter
750
6
0.0(0)
0

உருளை-ஆழி விதை மத்ரி

Jan-25-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உருளை-ஆழி விதை மத்ரி செய்முறை பற்றி

பஞ்சாபில் பிரபலமான மத்ரி என்னும் பண்டத்தில் வித்தியாசமாக உருளைக்கிழங்கு மற்றும் ஆளி விதைப்பொடி கலந்து செய்த ருசியான மொறு மொறுப்பான ஸ்னாக் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • பஞ்சாபி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உருளைக்கிழங்கு 1 சிறிய சைஸ்
  2. ஆழி விதைப்பொடி 1/4 கப்
  3. கோதுமை மாவு 1/2 கப்பிற்கு சற்று கூடுதலாக
  4. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  5. மல்லித்தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  7. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  8. ஓமம் 1/4 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. தண்ணீர் தேவைக்கு
  11. எண்ணெய் மாவுக்கு , பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கைக் குக்கரில் 10 விசில் வேக வைத்துத் தோலுரித்துக் கட்டி இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
  2. மசித்த கிழங்குடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  3. பின்னர் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  4. ஒரு உருண்டை எடுத்து சற்று தடிமனான சப்பாத்தியாக பரத்தி, கூரான மூடி அல்லது குக்கீ கட்டரால் சிறிய வட்டங்களாக வெட்டவும்.
  5. வெட்டிய வட்டங்களை முள் கரண்டியால் குத்தி துளையிட்டு வைக்கவும். இப்படி குத்துவதால் பொரிக்கும் போது பூரி மாதிரி உப்பாமல் மாவு தட்டையாக இருக்க உதவும்.
  6. மற்றொரு வடிவத்திலும் செய்யலாம். அதற்கு, வெட்டி முள் கரண்டியால் குத்திய வட்டத்தை, பாதியாக மடித்து மீண்டும் முள் கரண்டியால் குத்தி, அதை மீண்டும் பாதியாக மடித்து மீண்டும் முள் கரண்டியால் குத்தவும். பார்க்க முக்கோண வடிவில் இருக்கும்.
  7. மேற்குறிப்பிட்ட மாதிரி அனைத்து மாவையும் செய்யவும்.
  8. பின்னர், ஓரளவுக்கு சூடான எண்ணெயில் அவற்றை இட்டு சிம்மில் வைத்து நன்றாக நிறம் மாறி க்ரிஸ்பாகும் வரை பொரிக்கவும். கண்டிப்பாக சிம்மில் வைத்து தான் பொரிக்க வேண்டும். அப்பொழுது தான் மொறு மொறுப்பாக இருக்கும். இல்லையெனில் நடுப்பக்கம் மென்மையாகி விடும்.
  9. பொரித்த மத்ரியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். இது மாலை நேரத்துக்கு சிறப்பான ஆரோக்கியமான பண்டம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்