ஜீரா ஆலு | Jeera aloo in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  26th Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Jeera aloo by Krishnasamy Vidya Valli at BetterButter
ஜீரா ஆலுKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

2

0

4 votes
ஜீரா ஆலு recipe

ஜீரா ஆலு தேவையான பொருட்கள் ( Ingredients to make Jeera aloo in Tamil )

  • உருளைக்கிழங்கு - 1 ( பெரியது )
  • பச்ச மிளகாய் - 1
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  • கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  • நெய் / எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  • உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 4 சிட்டிகை
  • மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
  • காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

ஜீரா ஆலு செய்வது எப்படி | How to make Jeera aloo in Tamil

  1. உருளைகிழங்கை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கி மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். அல்லது கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டிக்கொள்ளலாம்
  2. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு வதக்கவும்
  3. பச்ச மிளகாய் இஞ்சி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. உப்பு மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் பெருங்காயம் தனியா பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
  5. உருளைகிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. இறக்கி எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான ஜீரா ஆலு தயார்

எனது டிப்:

எலுமிச்சை சாறுக்கு பதிலாக ஆம்சூர் பவுடர் சேர்க்கலாம்

Reviews for Jeera aloo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.