Photo of Jeera aloo by Krishnasamy Vidya Valli at BetterButter
629
5
0.0(0)
0

ஜீரா ஆலு

Jan-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஜீரா ஆலு செய்முறை பற்றி

இது நோ கார்லிக் நோ ஆனியன் வகையை சேர்ந்தது. வட இந்தியாவில் பண்டிகை மற்றும் விரத நாட்களில் கூட செய்வார்கள். செய்வது மிகமிக சுலபம். ரைஸ் / சப்பாத்தி / ரொட்டி / நாண் / பூரியுடன் சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1 ( பெரியது )
  2. பச்ச மிளகாய் - 1
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  5. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  6. நெய் / எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. சீரகம் - 2 தேக்கரண்டி
  8. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  9. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  10. பெருங்காயம் - 4 சிட்டிகை
  11. மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
  12. காஷ்மீர் சில்லிபவுடர் - 2 சிட்டிகை
  13. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி சதுரம் சதுரமாக நறுக்கி மைக்ரோவேவில் 5 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும். அல்லது கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து வடிகட்டிக்கொள்ளலாம்
  2. கடாயில் நெய் / எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு வதக்கவும்
  3. பச்ச மிளகாய் இஞ்சி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. உப்பு மஞ்சள்பொடி காஷ்மீர் சில்லிபவுடர் பெருங்காயம் தனியா பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்
  5. உருளைகிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. இறக்கி எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவினால் அருமையான ஜீரா ஆலு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்