வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு அரிசி மாவு பின்வீல்

Photo of Potato rice flour pinwheel by Krishnasamy Vidya Valli at BetterButter
249
5
0.0(0)
0

உருளைக்கிழங்கு அரிசி மாவு பின்வீல்

Jan-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு அரிசி மாவு பின்வீல் செய்முறை பற்றி

காபி/டீ க்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. எப்போதும் மைதாவில் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக அரிசி மாவில் செய்துள்ளேன். ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  3. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  4. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  5. காஷ்மீர் சில்லிபவுடர் - 1/4தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 3 சிட்டிகை
  7. ஆம்சூர் பவுடர் - 2 சிட்டிகை
  8. தனியா பொடி - 2 சிட்டிகை
  9. சீரக பொடி - 2 சிட்டிகை
  10. மிளகு பொடி - 2 சிட்டிகை
  11. எண்ணெய்-1தேக்கரண்டி
  12. மாவிற்கு தேவையானவை
  13. அரிசி மாவு - 1 / 4 கப் + 2 தேக்கரண்டி
  14. ரவை - 1 மேஜைகரண்டி
  15. உப்பு - 4 சிட்டிகை
  16. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  17. பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. மாவிற்கு கொடுத்தவற்றை சேர்த்து கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்
  3. வேக வைத்த உருளைகிழங்கோடு கொத்தமல்லி இலை உப்பு மற்ற எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும்
  4. மாவை சப்பாத்தி போல் இட்டு கொள்ளவும் . சிறிது கனமாக இடவும்
  5. அதன் மேல் உருளைகிழங்கு மசாலாவை பரத்தி வைக்கவும்
  6. சப்பாத்தியை ஒருபுறத்தில் இருந்து சுருட்டி கொள்ளவும்
  7. தண்ணீர் தொட்டு கடைசி பகுதியை ஒட்டி விடவும்
  8. சிறிது நேரம் கழித்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்
  9. கையால் சிறிது தட்டிக்கொள்ளவும்
  10. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் . விருப்பப்பட்டால் ஷாலோ பிரை செய்து எடுக்கவும்
  11. டொமட்டோ / சில்லி சாஸ் உடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்