வீடு / சமையல் குறிப்பு / வாழை இலையில் பேக் செய்த உருளைக்கிழங்கு வறுவல்

Photo of Banana Leaf wrapped Potato Fry by Hameed Nooh at BetterButter
468
6
0.0(0)
0

வாழை இலையில் பேக் செய்த உருளைக்கிழங்கு வறுவல்

Jan-26-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழை இலையில் பேக் செய்த உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை பொறித்து மசாலா கலவையோடு வாழை இலையில் மடித்து பேக் செய்யும் இந்த பதார்த்தம் வாழை இலை மணத்தோடு மிக சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கேரளா
  • பேக்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட்டி வைக்க:
  2. உருளைக்கிழங்கு - 1 ( பெரியது)
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  4. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
  5. சோள மாவு - 2 தேக்கரண்டி
  6. உப்பு - சுவைக்கேற்ப
  7. பல்லாரி - 1
  8. எண்ணெய் - பொறிக்க
  9. மசாலா செய்ய :
  10. கடுகு - 1 தேக்கரண்டி
  11. சீரகம் - 1 தேக்ரண்டி
  12. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  13. சின்ன வெங்காயம் - 5
  14. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  15. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  16. தக்காளி - 1
  17. கருவேப்பிலை - 1 கீற்று
  18. மல்லித்தழை - கொஞ்சம்
  19. உப்பு - சுவைக்கேற்ப
  20. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை மெல்லிய வட்டமாக நறுக்கி தண்ணீரில் போட்டு இரண்டு மூன்று முறை நன்றாக கழுவவும்.
  2. பிறகு தண்ணீரை வடித்து உப்பு சோள மாவு மிளகாய் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி பல்லாரி வெங்காயம் ஒன்றை நீளமாக நறுக்கி ஊற வைத்த உருளைக்கிழங்கோடு போட்டு பொறித்தெடுக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் கடுகு போட்டு தாளிக்கவும்.
  5. பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு பொறிந்ததும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. மசாலா பொருட்களை போட்டு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வேக விடவும்.
  7. தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்து நன்கு வேக விடவும். இறுதியாக மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  8. வாழை இலையை சதுரமாக வெட்டி கழுவிக் கொள்ளவும். பிறகு அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்து விடவும்.
  9. பிறகு ஒரு கரண்டி மசாலாவை இலையின் நடுவே வைக்கவும்.
  10. அதன் மேல் பொறித்த உருளைக்கிழங்கை சிறிது வைக்கவும்.
  11. அதன் மேல் மற்றொரு கரண்டி மசாலாவை பரப்பவும்.
  12. இப்பொழுது இலையை நான்கு பக்கங்களிலும் பொட்டலம் போல் மடிக்கவும்
  13. அதன் மேல் ஃபாயில் பேப்பரை கொண்டு மடிக்கவும்.
  14. ப்ரீஹுட் செய்யப்பட்ட அவனில் 250 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும். இல்லையென்றால் வாழை இலையோடு தவாவை சூடுபடுத்தி அதன் மேல் வைக்கவும்.
  15. 5 நிமிடங்கள் கழித்து மறுபக்கத்தை திருப்பிப் போடவும்.
  16. இவ்வாறாக பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான மசாலா உருளை வறுவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்