Photo of Aloo Gobi Stuffed Karela Curry by Ayesha Ziana at BetterButter
747
6
0.0(1)
0

Aloo Gobi Stuffed Karela Curry

Jan-26-2018
Ayesha Ziana
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்டப்பிங் செய்ய: உருளைக்கிழங்கு 3 சிறிய சைஸ்
  2. காலிபிளவர் 3 ப்ளோரெட்ஸ்
  3. பாகற்காய் 1 பெரியது அல்லது 3 சிறியது
  4. உப்பு தேவைக்கு
  5. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. கரம் மசாலா 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 ஸ்பூன் + ஷாலோ ப்ரையாக பொரிக்க
  9. கறி செய்ய: மீதமுள்ள ஸ்டப்பிங்
  10. வெங்காயம் 1/2
  11. தக்காளி 1
  12. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  13. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  14. மஞ்சள் தூள் 1/3 ஸ்பூன்
  15. மல்லித்தூள் 1 1/2 ஸ்பூன்
  16. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  17. கரம் மசாலா 1 ஸ்பூன்
  18. உப்பு தேவைக்கு
  19. தண்ணீர் 1/2 கப் அல்லது தேவைக்கு
  20. எண்ணெய் 2 ஸ்பூன்
  21. பிரஷ் க்ரீம் சிறிது
  22. கொத்தமல்லித்தழை சிறிது

வழிமுறைகள்

  1. ஸ்டப்பிங் செய்ய: உருளைக்கிழங்கை குக்கரில் 10 விசில் வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். சூடான தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காலிபிளவரை 10 நிமிடம் போட்டு மூடி வைத்து வடிகட்டி துருவி கொள்ளவும்.
  2. பாகற்காயை தோல் சீவி உப்பு தண்ணீரில் 1/2 மணி நேரம் போட்டு வைக்கவும். பின்னர் வடிகட்டி அலசிக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு, துருவிய காலிபிளவர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். ஸ்டப்பிங் தயார்.
  4. பின்னர், பாகற்காயை நுனிகளை மட்டும் விட்டு விட்டு நடுப்பகுதியில் கீறவும். உள்ளிருக்கும் விதை நீக்கி, ஸ்டப்பிங் வைத்து அடைக்கவும். ஸ்டப்பிங் வெளியே வராமல் இருக்க இரு பக்கமும் நூல் வைத்து கட்டவும்.
  5. பின்னர், தோசைக்கல் அல்லது வாணலியில் எண்ணெய் ஊற்றி எல்லா பக்கமும் நன்கு மிருதுவாகும் வரை நிதானமாக பொரிக்கவும். இப்போது பொரித்த பாகற்காய் தயார்.
  6. கறி செய்ய: மீதமுள்ள ஸ்டப்பிங்கை வாணலியில் போட்டு, ஒன்றாக அரைத்த வெங்காயம் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து கலந்து அடுப்பில் வைக்கவும்..
  7. கிரேவி கொதித்து ஓரளவு இறுகியதும், எண்ணெய் ஊற்றி கலந்து அடுப்பை அணைக்கவும்.
  8. பரிமாறும் பாத்திரத்தில் கிரேவியை ஊற்றி, பொரித்த பாகற்காய் மேல் வைத்து, பிரஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
  9. சூப்பரான உருளை கோபி அடைத்த பாகற்காய் கறி தயார். இது சாதம், வெரைட்டி ரைஸ், டிபன் போன்றவற்றுக்கு நல்ல சைட் டிஷ்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ravi Chandran
Jan-28-2018
Ravi Chandran   Jan-28-2018

Very nice.. congratulations

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்