வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வேர்கடலை கறி

Photo of Potato peanut curry by Krishnasamy Vidya Valli at BetterButter
442
6
0.0(0)
0

உருளைக்கிழங்கு வேர்கடலை கறி

Jan-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வேர்கடலை கறி செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மற்றும் வேர்கடலை சேர்த்து செய்யப்படும் கறி வகை இது. சப்பாத்தி / ரொட்டி / நாண் / ரைஸ் எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட்டிஷ் வகை . வேர்கடலையை ஊறவைக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உருளைக்கிழங்கு - 1
  2. பச்ச வேர்கடலை - 1 / 8 கப் ( நான்கு மணி நேரம் வரை ஊறவைக்கவும் )
  3. வெங்காயம் - 1 / 2
  4. தக்காளி - 1 / 2
  5. உப்பு-1/4தேக்கரண்டி + 2 சிட்டிகை
  6. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  7. காரப்பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
  9. தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  10. தாளிக்க கடுகு - 1 / 4 தேக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  12. எள்ளு - 1 / 4 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல் - 1
  14. பெருங்காயம் - 2 சிட்டிகை
  15. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  16. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. வேர்கடலையை நான்கு மணி நேரம் வரை ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  4. வெங்காயம் போட்டு வதக்கியபின் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி உப்பு தனியா பொடி காரப்பொடி சேர்த்து கிளறவும்
  5. வேகவைத்த வேர்கடலை மற்றும் உருளைகிழங்கு சேர்க்கவும்
  6. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  7. சுவையான உருளைக்கிழங்கு வேர்கடலை கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்