வீடு / சமையல் குறிப்பு / ராஜ் கச்சோரி

Photo of Raj Kachori by Anjana Chaturvedi at BetterButter
4943
1118
4.5(0)
0

ராஜ் கச்சோரி

Feb-16-2016
Anjana Chaturvedi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • உ.பி
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ரவை - 1 கப்
  2. ரிபைண்டு மைதா - 1 தேக்கரண்டி
  3. கடலை மாவு - 1/4 கப்
  4. சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. பழ உப்பு/ஈனோ - ஒரு சிட்டிகை (விருப்பம் இருந்தால்)
  6. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  7. ஒருங்கிணைப்பதற்கு:
  8. பட்டாணி/காபுலி கடலை - 1 கப், வேகவைத்தது
  9. உருளைக்கிழங்கு - 2 சிறிய அளவு, வேகவைத்தது
  10. தயிர் வடை (வடை மட்டும்) - 6 துண்டுகள்
  11. பூந்தி - 3 தேக்கரண்டி
  12. சேவ் - 3 தேக்கரண்டி
  13. மாதுளை விதைகள் - 2 தேக்கரண்டி
  14. தயிர் - 1 கப்
  15. புதினா அல்லது கொத்துமல்லி சட்னி - 1/2 கப்
  16. புளி சட்னி - 1/3 கப்
  17. வறுத்த சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
  18. மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி
  19. கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பட்டியலிடப்பட்ட அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் ரஜோரி தயாரிக்க எடுத்துக்கொள்ளவும். நன்றாக்க் கலந்துகொள்ளவும். நடுத்தர அடர்த்தியில் மாவைத் தயாரிக்கப் போதுமானத் தண்ணீரை எடுத்துக்கொள்ளவும்.
  2. மூடிபோட்டு 15 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும். மீண்டும் பிசைந்து மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகள் பிடித்துக்கொள்ளவும். நடுத்தர மொத்தத்தில் பூரிபோல் உருட்டிக்கொள்க.
  3. தயாரித்து வைத்துள்ள பூரியை சூடான எண்ணெயில் போடவும். முழுமையாக உப்புவதற்கு கரண்டியால் தட்டிக்கொள்க. தீயை மிதமான சூட்டுக்குக் குறைத்து பொன்னிறமாக மாறும்வரை பொரிக்கவும்.
  4. வெந்த்தும் பேப்பர் நாப்கினில் வடிக்கட்டி முழுமையாக ஆறவிடவும்.
  5. தயிரைக் கடைந்து கொஞ்சம் உப்பு சேர்த்து 1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கவும்.
  6. பரிமாறும்போது மேல் பகுதியைத் தட்டி ஓட்டையிடவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணி, தயிர் வடையை சேர்க்கவும். கொஞ்சம் தயிரையும் பச்சை சட்னியையும் ஊற்றவும்.
  7. உடைத்த அப்பளத்தையும் பூந்தியையும் கொண்டு மேல் பகுதியை நிரப்பவும். மேலே தயிர், பச்சை சட்னி, புளி சட்னியை தெளிக்கவும்.
  8. கொஞ்சம் புஜியா சேவை சேர்த்து, மிளகாய் தூள், சீரக தூள், கருப்பு உப்பு தெளிக்கவும்.
  9. மாதுளை விதைகளால் ஆலங்கரித்து உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்