வேகவைத்தக் காய்கறி பன்னீர் மோமோஸ் | Steamed veg and paneer momos in Tamil

எழுதியவர் Monika S Suman  |  16th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Steamed veg and paneer momos by Monika S Suman at BetterButter
வேகவைத்தக் காய்கறி பன்னீர் மோமோஸ்Monika S Suman
 • ஆயத்த நேரம்

  40

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

9394

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

வேகவைத்தக் காய்கறி பன்னீர் மோமோஸ் recipe

வேகவைத்தக் காய்கறி பன்னீர் மோமோஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Steamed veg and paneer momos in Tamil )

 • பூரணத்திற்கு:
 • 1/2 கப் துருவிப் பிழிந்த முட்டைக்கோஸ்
 • 1/2 கப் பன்னீர், துருவியது அல்லது பொடி செய்யப்பட்டது
 • 1/4 கப் மணி மிளகு, பொடியாக நறுக்கப்பட்டது
 • 1 நடுத்தர அளவு வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
 • 5 தேக்கரண்டி கொத்துமலலி, பொடியாக நறுக்கப்பட்டது
 • 4 பூண்டு பற்கள், துருவியது
 • 1 இன்ச் இஞ்சி, துருவியது
 • பச்சை மிளகாய் சுவைக்கேற்ற அளவு
 • சுவைக்கேற்ற அளவு உப்பு
 • சிவப்பு சட்னிக்கு:
 • 2 தக்காளி
 • 1 பச்சை மிளகாய்
 • 4 பூண்டு பற்கள்
 • 1 தேக்கரண்டி கடுகு
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள், பொடியாக நறுக்கப்பட்டது
 • மாவுக்காக:
 • 1 கப் மைதா
 • 1/4 தேக்கரண்டி உப்பு
 • 1 தேக்கரண்டி எண்ணெய்
 • வெதுவெதுப்பானத் தண்ணீர் மாவு பிசைவதற்கு

வேகவைத்தக் காய்கறி பன்னீர் மோமோஸ் செய்வது எப்படி | How to make Steamed veg and paneer momos in Tamil

 1. மாவு தயாரிப்பதற்கு, மைதா, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும், ஒரு சமயத்தில் சிறிதளவே தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும், மிருதுவான மாவைத் தயாரிப்பதற்கு. ஈரமானத் துணியால் மூடி பயன்படுத்தும் வரை விட்டுவைக்கவும்.
 2. பூரணத்தைத் தயாரிப்பதற்கு, அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்.
 3. மமூசுக்கு வடிவம் கொடுக்க, மாவை 14 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும். ஒரு பகுதியை எடுத்து, கைகளால் உருண்டை பிடித்து ஒரு உருட்டைக் கட்டையால் முடிந்தளவிற்கு மெலிதாக உருட்டிக்கொள்ளவும். (ரொட்டி தயாரிப்பது போல் தயாரித்துககொள்ளவும்).
 4. வட்டத்தில் மையத்தில் சிறிது பூரணத்தை நிரப்பு இரண்டு பக்கங்களையும் தூக்கி படத்தில் உள்ளதுபோல் மூடவும். எடுத்து வைத்துக்கொள்ளவும். ஈரமானத் துணியால் மூடி வைக்கவும். இதே செயல்முறையை 13 பாகங்களுக்கும் செய்யவும்.
 5. செய்துமுடித்ததும், மமூசை மமூ ஸ்டாண்டில் அல்லது இட்லி குண்டானில் 15 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
 6. சட்னி தயாரிப்பதற்கு, கொஞ்சம் வெதுவெதுப்பானத் தண்ணீர் ஒரு பிரஷர் குக்கரில் எடுத்துக்கொள்க. தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பிரஷர் குக்கரில் 1 விசிலுக்கு வேகவைக்கவும். 1 விசிலுக்குப் பின் அடுப்பை நிறுத்திவிட்டு பிரஷரை வெளியேற்றவும்.
 7. ஆவி அடங்கியதும், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்து ஆறவைக்கவும். அவை ஆறியதும், ஒரு மிக்சியில் சாந்தாகத் தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும். அதன்பின்னர் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு உப்பு, கடுகு எண்ணெய், கொத்துமல்லி இலைகளைச் சேர்க்கவும். கலந்து பரிமாறவும்.
 8. மமூசை சூடாக உடனே சட்னியோடு பரிமாறவும்.

எனது டிப்:

* சட்னியிலும் பூரணத்திலும் கொத்துமல்லி இலைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டாம். அது சுவையை அதிகரிக்கும். * உங்கள் சுவைக்கேற்றபடி சட்னியிலும் பூரணத்திலும் மிளகாய்களைச் சேர்த்து காரத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள். இந்த உணவில் வழக்கமான காரம் இருக்கும்.

Reviews for Steamed veg and paneer momos in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.