வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு மட்டன் பொரியல்

Photo of Alu and Mutton Poriyal by Panchavarnam Ramasamy at BetterButter
607
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு மட்டன் பொரியல்

Jan-28-2018
Panchavarnam Ramasamy
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு மட்டன் பொரியல் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கும் மட்டனும் சேர்ந்த பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2நடுத்தரம்
  2. ஆட்டுக்கறி. கால் கிலோ
  3. சின்ன வெங்காயம் 10நம்பர்
  4. மல்லி. 2ஸ்பூன்
  5. சீரகம். 1ஸ்பூன்
  6. மிளகு. 10நம்பர்
  7. வர மிளகாய் 3 நம்பர்
  8. கறிவேப்பிலை
  9. தே.உப்பு
  10. எண்ணெய் 3ஸ்பூன்
  11. தாளிக்க :
  12. கடுகு
  13. பெரிய வெங்காயம் 1நம்பர்
  14. வர மிளகாய் 2நம்பர்
  15. இஞ்சி 1துண்டு
  16. பூண்டு 5பல்
  17. தேங்காய் அரை மூடி
  18. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி சீரகம் சேர்த்து வறுக்கவும்
  2. அதனுடன் மிளகு வர மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
  3. சின்ன வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி ஆறிய பின்பு மிக்சியில் நைசாக அரைக்கவும்
  4. இந்த மசாலா விழுதில் நீர் ஊற்றி கலந்து ஆட்டுக்கறியைச்சுத்தம் செய்து குக்கரில் அதனுடன் சேர்த்து ஆறு விசில் விடவும்
  5. கடாயை அடுப்பில் வைத்து குக்கரில் விசில் போன பின்பு மசாலாவுடன் வெந்த ஆட்டுக்கறியைச்சேர்த்து கொதிக்க விடவும்
  6. உருளைக்கிழங்கை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கலவையில் சேர்த்து வேக விடவும்.
  7. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  8. மசாலா கலவை ஆட்டுக்கறி உருளைக்கிழங்குடன் சேர்ந்து கெட்டியாக வரும் வரை வணக்கி இறக்கி வைக்கவும்
  9. இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு சேர்த்து பொரிந்த பின் நீள வாக்கில் அரிந்த பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  10. இஞ்சி பூண்டை நன்கு தட்டி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  11. முழு வர மிளகாய் கறி வேப்பிலை சேர்த்து வணக்கவும்.
  12. கடைசியாக வெந்த உருளைக்கிழங்கு மட்டன் ஆகியவற்றைச்சேர்த்து வணக்கவும்
  13. துருவிய தேங்காயைச்சேர்த்து நன்கு கலக்கி இறக்கி வைக்கவும்
  14. நன்கு அலங்காரம் செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்