வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரை பாகு உருளைக்கிழங்கு வைத்த வலை ஆப்பம்

Photo of Caramelized Potatoes Net Crepes by Hameed Nooh at BetterButter
40
5
0.0(0)
0

சர்க்கரை பாகு உருளைக்கிழங்கு வைத்த வலை ஆப்பம்

Jan-28-2018
Hameed Nooh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரை பாகு உருளைக்கிழங்கு வைத்த வலை ஆப்பம் செய்முறை பற்றி

மலேசியாவின் பிரபலமான ஜாலர் ஆப்பத்தில் கேரமல் உருளைக்கிழங்கு வைத்து தயாரித்த ஒரு புதுமையான குழந்தைகள் விரும்பும் உணவு பதார்த்தம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தாய்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வலை ஆப்பம் செய்ய:
  2. கோதுமை/மைதா - 1 1/4கப்
  3. பால் - 1 கப்
  4. முட்டை - 1
  5. உப்பு - ஒரு சிட்டிகை
  6. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  7. கேரமல் உருளை செய்ய :
  8. உருளைக்கிழங்கு - 1
  9. சர்க்கரை - 1/2 கப்
  10. வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  11. உப்பு - 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அரை வேக்காடாக அவித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  2. பிறகு ஒரு கடாயில் சர்க்கரையை போட்டு குறைந்த தணலில் சூடாக்கவும்.
  3. சர்க்கரை மெதுவாக உருக ஆரம்பித்ததும் வெண்ணெயை போட்டு கைவிடாமல் கலக்கவும்.
  4. பிறகு அதோடு அவித்த உருளைகிழங்குகளை போட்டு மெதுவாக ஒரு முறை கிளறி அடுப்பை அணைக்கவும்.
  5. வலை ஆப்பத்திற்கு மாவுடன் உப்பு சேர்த்து முட்டையை பாலுடன் எண்ணெய் விட்டு நன்கு விஸ்க் செய்து மாவுடன் நன்றாக கலக்கவும்.
  6. வாணலியை சூடாக்கி சிறிது எண்ணெய் விட்டு தேய்த்து ஜாலர் ஆப்ப அச்சில் மாவை ஊற்றி வாணலியில் ஊற்றவும்.
  7. வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போடவும்.
  8. ஆப்பத்தை எடுத்து நடுவில் காரமல் உருளைக்கிழங்கை வைத்து நான்கு பக்கங்களிலும் மடக்கவும்.
  9. பிறகு காரமல் சாஸூடன் உருளைக்கிழங்கை மேலே வைத்து சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்