வீடு / சமையல் குறிப்பு / ஆலு பைங்கன் மசாலா

Photo of Aloo Baingan  Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
381
5
0.0(0)
0

ஆலு பைங்கன் மசாலா

Jan-28-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு பைங்கன் மசாலா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கையும் கத்திரிக்காயையும் வைத்து செய்யும் கிரேவி வெரைட்டி இது. எண்ணெய் அதிகம் கிடையாது. மொத்தமாகவே 1/2 தேக்கரண்டி எண்ணெய் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மசாலா பொடியும் வித்யாசமாக செய்யப்பட்டுள்ளது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக் கிழங்கு- 1
  2. கத்திரிக்காய் - 1
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-1
  5. உப்பு -1/2 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  7. காஷ்மீர் சில்லி பவுடர்-1/4 தேக்கரண்டி
  8. எலுமிச்சை சாறு-1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 1 தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  12. சீரகம் -1/2 தேக்கரண்டி
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1/4 தேக்கரண்டி
  14. வறுத்து திரிக்க (எண்ணெய் விடாமல் வறுக்கவும்)
  15. வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
  16. கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
  17. பட்டை - 1 சிறிய துண்டு
  18. ஏலக்காய் கிராம்பு - தலா 2
  19. மிளகாய் வத்தல் - 1
  20. தேங்காய் துருவல் -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. உருளைக்கிழங்கை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டிக்கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. வறுக்க கொடுத்தவற்றை சேர்த்து வறுத்து திரிக்கவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்
  7. உப்பு மஞ்சள் பொடி காஷ்மீர் சில்லி பவுடர் வறுத்து திரித்தது சேர்த்து கிளறவும்
  8. அதோடு கத்திரிக்காயை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. உருளைக் கிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்
  10. செமிசாலிட் பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலையை தூவினால் எண்ணெய் அதிகமில்லாத ஆலு பாங்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்