வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை

Photo of Potato ragi ilai adai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
6
0(0)
0

உருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை

Jan-28-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு கேழ்வரகு இலையடை செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு மற்றும் கேழ்வரகு மாவு வைத்து செய்யப்படும் ஆரோக்கியமான டிபன் வெரைட்டி. கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது . எண்ணெய் மொத்தமாக அரை தேக்கரண்டி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்ஸ்டிக் கடாய் உபயோகப்படுத்தினால் அதுவும் தேவையில்லை.ஆவியில் வேக வைப்பதால் கூடுதல் ஆரோக்கியம். ஒருவருக்கு ஐந்து வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కలయిక
  • ఆవిరికి
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 2
  2. கேழ்வரகு மாவு - 1/2 கப்
  3. தட்டாம்பயறு(பெரும்பயறு) - 1/8 கப்
  4. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  5. பச்ச மிளகாய் - 4
  6. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  7. பெருங்காயம் 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - 1 1/4 தேக்கரண்டி
  9. மஞ்சள் பொடி- 3 சிட்டிகை
  10. தாளிக்க
  11. கடுகு- 1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
  13. கருவேப்பிலை - 2 ஆர்க்கு(விருப்பமானால்)
  14. எண்ணெய் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக்கொள்ளவும்
  2. தட்டாம்பயிறை வேக வைத்து க்கொள்ளவும்
  3. வெறும் கடாயில் கேப்பை மாவை வறுத்துக்கொள்ளவும்
  4. மிக்ஸியில் பச்ச மிளகாய் பெருங்காயம் கொத்தமல்லி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  6. ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  7. அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  8. கேழ்வரகு மாவு சேர்த்து கெட்டி இல்லாமல் கிளறவும்
  9. அதோடு உருளைக்கிழங்கு தேங்காய் துருவல் தட்டாம்பயறு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  10. வாழை இலையில் சிறு சிறு அடைகளாக தட்டி ஆவியில்(இட்லி தட்டில் வைத்து) பத்து முதல் பதினைந்து நிமிடங்கள்வேகவைத்து எடுக்கவும்
  11. இலையிலிருந்து எடுத்து பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்