வீடு / சமையல் குறிப்பு / Potato Mutton Maklouba (Arabian style Upside down Rice)

Photo of Potato Mutton Maklouba (Arabian style Upside down Rice) by Ayesha Ziana at BetterButter
270
7
0.0(1)
0

Potato Mutton Maklouba (Arabian style Upside down Rice)

Jan-29-2018
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
75 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 4 மீடியம் சைஸ்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. சீரக சம்பா அரிசி 1 1/2 கப்
  5. எண்ணெய் ஷாலோ ப்ரை செய்ய+ரைஸ் செய்ய
  6. கிரேவி செய்ய: சீரகம் 1 ஸ்பூன்
  7. மிளகு 1 ஸ்பூன் நிறைய ஒன்றிரண்டாக பொடித்தது
  8. கிராம்பு 5
  9. பட்டை சிறு துண்டு
  10. ஏலக்காய் 5
  11. மட்டன் 1/2 கிலோ
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 1
  14. பச்சை மிளகாய் 3 அல்லது தேவைக்கேற்ப
  15. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன் நிறைய
  16. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  17. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  18. மல்லி தூள் 2 ஸ்பூன்
  19. பெருஞ்சீரகத் தூள் 1 1/2 ஸ்பூன்
  20. கரம் மசாலா 2 ஸ்பூன் நிறைய
  21. உப்பு தேவைக்கு
  22. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  23. மல்லித்தழை 1 கை நிறைய
  24. புதினா 1/2 கையளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்றவற்றை வட்ட வடிவில் வெட்டி, தனித்தனியாக எண்ணெய் ஊற்றி ஷாலோ ப்ரை செய்து எடுத்து கொள்ளவும்.
  2. கிரேவி செய்ய: குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம், தட்டிய மிளகு, கிராம்பு, பட்டை, ஏலம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மட்டன், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், பெருஞ்சீரகத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து, கரம் மசாலா, மல்லி புதினா சேர்த்து கலந்து, குக்கரை மூடி 7 விசில் வேக வைக்கவும். கிரேவி தயார்.
  3. குக்கரைத் திறந்து, மட்டன் ஸ்டாக்கையும் இறைச்சி துண்டுகளையும் பிரித்து வைக்கவும்.
  4. பின்னர், பெரிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் வெங்காயத்தை ஒரு லேயராக அடுக்கவும். அதன் பின் பொரித்த தக்காளி, அதன் பின்னர் மட்டன் துண்டுகள், அதன் பின் பொரித்த உருளைக்கிழங்கு என 3 லேயர்கள் அடுக்கவும்.
  5. பின்னர், ஏற்கனவே 1 மணி நேரம் ஊற வைத்த அரிசியையும் சேர்த்து நன்றாக அழுத்தி பரப்பி, அதன் நடுவில் ஒரு கிண்ணத்தைக் கவிழ்த்து வைத்து அழுத்தி, மேலே மட்டன் ஸ்டாக்கை கவனமாக ஊற்றவும். இது மாதிரி செய்வதால் மட்டன் ஸ்டாக் முழுவதும் கீழ் பக்கம் போய்விடாமல், மேலேயும் சிறிது தங்கி, மேல் பக்கம் இருக்கும் அரிசியும் வேக உதவும்.
  6. பின்னர், மூடி வைத்து விட்டு, நேரடியாக சிம்மில் வைத்தோ அல்லது தம்மில் வைத்தோ 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வேக விடவும்.
  7. பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, 15-20 நிமிடங்கள் லேயர் செட்டாக வேண்டி அப்படியே ஆற விடவும். அதன் பின்னர், ஒரு பெரிய மூடியை பாத்திரத்தின் மேல் வைத்து, மொத்த ரைசையும் கவனமாக கவிழ்த்தவும்.
  8. அடுக்கடுக்கான லேயர்கள் அழகாக அமைந்திருக்கும் மிகவும் சுவையான மக்லூபா தயார். இதனுடன் சைட் டிஷாக தயிர், சாலட் இவையே போதுமானது. ஈத் பெருநாள், லஞ்ச்/டின்னர் பார்ட்டிகளுக்கு உகந்த உணவு.
  9. குறிப்பு: கத்தரிக்காய், காலி பிளவர், கேப்ஸிகம் போன்றவற்றையும் மேற்குறிப்பிட்ட படி பொரித்து, மேலும் சில லேயர்கள் உருவாக்கலாம். இந்த பதிவு உருளைக்கிழங்கு உணவுகள் போட்டிக்குப் பதிவிட்டுள்ளதால் மற்ற காய்கறிகளைத் தவிர்த்து விட்டு, உருளைக்கிழங்கை மட்டும் அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறேன். சிக்கன், மீன் போன்றவை வைத்தும் மக்லூபா செய்யலாம். அரிசியை மட்டன் ஸ்டாக்கில் தனியே வேக வைத்து விட்டு, அதன் பின்னர் லேயர் செய்யும்போது சேர்த்து 10-15 நிமிடங்கள் வேக விட்டாலும் போதுமானது.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mughal Kitchen
Jan-30-2018
Mughal Kitchen   Jan-30-2018

Super sister

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்