Photo of Potato Shrimp Boats by Hameed Nooh at BetterButter
321
6
0.0(1)
0

Potato Shrimp Boats

Jan-29-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • அமெரிக்கன்
  • பேக்கிங்
  • பேசிக் ரெசிப்பி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
  2. இறால் - 100 கிராம்
  3. துருவிய பனீர் - 1/2 கப்
  4. துருவிய சீஸ் - 1/4 கப்
  5. நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
  6. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  7. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  8. பாப்ரிகா - 1 தேக்கரண்டி
  9. நறுக்கிய மல்லித்தழை - 1 மேசைக்கரண்டி
  10. மயோனைஸ் - 1/4 கப்
  11. தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
  12. உப்பு - சுவைக்கேற்ப
  13. எண்ணெய் - பொரிக்க

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு அவித்து இரு பாதியாக வெட்டிக்கொள்ளவும்.
  2. சூடு ஆறியதும் கிழங்கில் நடுவே கரண்டியால் எடுத்து படகு போல் பள்ளம் ஆக்கவும்.
  3. இராலை சுத்தப்படுத்தி மிளகாய்த்தூள் உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் துருவிய சீஸ் பனீருடன் இரால் மிளகுத்தூள் பாப்ரிகா மயோனைஸ் தக்காளி சாஸ் உப்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  5. பின்பு அதோடு கிழங்கிலிருந்து எடுத்ததை நன்கு மசித்து சேர்க்கவும்.
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு படகை பொறித்து எடுக்கவும்.
  7. பிறகு சூடு ஆறியதும் கிழங்கினுள் சீஸ் இரால் கலவையை வைக்கவும்
  8. மேலே துருவிய சீஸை தூவவும்.
  9. ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 200 டிகிரியில் சீஸ் உருகும் வரை பத்து நிமிடங்கள் பேக் செய்து மேலே சாஸ் ஊற்றி சாப்பிடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mughal Kitchen
Jan-30-2018
Mughal Kitchen   Jan-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்