வீடு / சமையல் குறிப்பு / பனீர் கட்லெட்

Photo of Paneer cutlet by Asiya Omar at BetterButter
1161
6
0.0(0)
0

பனீர் கட்லெட்

Jan-29-2018
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் கட்லெட் செய்முறை பற்றி

பனீர்,உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் சேரும் பொழுது சத்தும் சுவையும் அதீதம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -200 கிராம்
  2. உருளைக்கிழங்கு -200 கிராம்
  3. பொடியாக நறுக்கிய காய்கறிகள் - 1/2 ( கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி)
  4. பொடியாக நறுக்கிய வெங்காயம் -2
  5. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  6. மிளகாய்,மஞ்சள்,கரம் மசாலா தூள்கள் - தலா கால் தேக்கரண்டி
  7. மிளகு,சீரகம்,சோம்பு தூள்கள் - தலா கால் தேக்கரண்டி
  8. நறுக்கிய மல்லி,புதினா சிறிது
  9. உப்பு - சுவைக்கு
  10. ப்ரெட் கிரம்ஸ்- 1 கப் அல்லது தேவைக்கு.
  11. மைதா 3-4 மேஜைக்கரண்டி கரைத்துக் கொள்ள
  12. எண்ணெய் - தேவைக்கு.
  13. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் எடுத்து ஆற விட்டு உதிர்த்து வைக்கவும்.பனீரை துருவி அல்லது உதிர்த்து வைக்கவும். காய்கறிகள் பொடியாக நறுக்கி வேக விட்டு வைக்கவும்.
  2. கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு,வெங்காயம்,இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. அத்துடன் உதிர்த்த பனீர் சேர்த்து வதக்கி,மசாலா தூள் வகைகள் உப்பு சேர்த்து வதக்கி ஆற விடவும்.
  4. ஒரு பவுலில் வேக வைத்த காய்கறிகள்,உருளைக்கிழங்கு,வதக்கிய பனீர்,நறுக்கிய மல்லி,புதினா சிறிது சேர்த்து நன்கு கலந்து 8-10 உருண்டைகளாக பிடிக்கவும்.
  5. ஒரு பவுலில் ப்ரெட் கிரம்ஸ் ,இன்னொரு பவுலில் மைதாவையும் திக்காக கரைத்து வைக்கவும்.
  6. உருண்டைகளை மைதா கரைசலில் முக்கி,ப்ரெட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து வைக்கவும். கையால் அழுத்தி விரும்பிய வடிவில் செய்யவும்.
  7. எண்ணெய் தவாவில் சூடு செய்யவும்.சூடானவுடன் மீடியமாக்கி கட்லெட் துண்டுகளைப் போட்டு பொரித்து பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.
  8. சுவையான பனீர் கட்லெட் தயார்.
  9. மாலை நேர ஸ்நாக்ஸ் அல்லது பார்ட்டிகளில் பக்க உணவாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்