வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு லாலிபாப்

Photo of Potato lolipop by Kalai Rajesh at BetterButter
39
8
0.0(0)
0

உருளைக்கிழங்கு லாலிபாப்

Jan-29-2018
Kalai Rajesh
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு லாலிபாப் செய்முறை பற்றி

இந்த சிற்றுண்டியை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவள்.. இது பார்ப்பதற்கும் மட்டும் அல்ல உண்ணவும் ருசித்தான்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • அப்பிடைசர்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

 1. வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
 2. பன்னீர் - 100 கிராம்
 3. இஞ்சி - தோல் உரித்து துருவியது - 1/2"
 4. பூண்டு - 3 பல் - துருவிக்கொள்ளவும்
 5. ப.மிளகாய் - 1 அ 2 பொடியாக நறுக்கியது அ 1/4 தேக்கரண்டி வர மிளகாய் தூள்- காரம் தேவைப்பட்டால் அதிகம் சேர்த்தது கொள்ளலாம்
 6. பெ .வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
 7. ஜீரக தூள் - 1 சிட்டிகை
 8. குறுமிளகு தூள் - 1 சிட்டிகை
 9. எலுமிச்சை சாறு - சிறு துளிகள்
 10. மல்லி இலை - பொடியாக நறுக்கியது
 11. பேபி கார்ன் - 10 அ 11
 12. மக்கா சோள மாவு - 11/4 மேசைக்கரண்டி
 13. மைதா மாவு - 1/4கப் (உருட்டுவதற்கு மட்டும்)

வழிமுறைகள்

 1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும் .
 2. வெந்த பின் அதனுடன் மைதாவை தவிர எல்ல பொருட்களையும் சேர்த்து நன்கு பிசையவும்.
 3. மாவு சரியான பதத்தில் இருக்க வேண்டும் . மிக கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசையவும், மிக மிருதுவாக இருந்தால் சிறிது பன்னீர் (அ) மக்காச்சோளம் சேர்த்து பிணையவும்.
 4. பின் மாவை ஒரே அளவிளான உருண்டையாக உருட்டி அதில் பிஞ்சு மக்காச்சோளத்தின் பெரிய பகுதியை உள்ளே வைக்கவும்
 5. மிக பொறுமையாக அந்த வடிவத்தை செய்து முடிக்கவும்..
 6. படம்
 7. எல்லாவற்றையும் செய்து முடித்தவுடன் .. 20 (அ) 30 நிமிடம் பிரிட்ஜ்ல் வைத்து விடவும்
 8. பொரிக்கும் போது எடுத்தது மைதாவில் லேசாக பிரட்டி பின் அதிகம் உள்ள மாவை தட்டில் தட்டி விட்டு.. ஏன்னையை காய வைத்து..மிதமான தீயில் பொரித்தி ஈடுக்கவு.ம்
 9. தீயை வேகமாக வைக்க வேண்டாம்.
 10. சூடாக தக்காளி சாசுடன் பரிமாறவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்