வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பச்சை பயறு உருளைக்கிழங்கு கட்லெட்

Photo of SPROUTED GREENGRAM &POTATO CUTTLET by Kalai Rajesh at BetterButter
230
9
0.0(0)
0

முளைகட்டிய பச்சை பயறு உருளைக்கிழங்கு கட்லெட்

Jan-29-2018
Kalai Rajesh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பச்சை பயறு உருளைக்கிழங்கு கட்லெட் செய்முறை பற்றி

காலையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஏதேனும் உணவு செய்ய நினைத்தால், பச்சைப்பயறு கட்லெட் செய்து கொடுங்கள். இந்த கட்லெட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பான் பிரை
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உருளைக்கிழங்கு - 3
  2. முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1 கப்
  3. சாட் மசாலாத் தூள் - 1/2 டீஸ்புன்
  4. வேகவைத்த கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் - 2 கப்
  5. கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  6. நறுக்கிய பச்சை மிளகாய் - 3
  7. சீரகத்தூள் - 2 டீஸ்புன்
  8. கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்புன்
  9. சோள மாவு - 5 டேபிள்ஸ்புன்
  10. எண்ணெய் - தேவையான அளவு
  11. உப்பு - தேவையான அளவு
  12. பிரேட் தூள் - 21/2 மேசைகரண்டி + பிரட்டுவதற்கு
  13. அரிசி மாவு (அ) மைதா மாவு பிரட்டுவதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முளை கட்டிய பச்சைப்பயறை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
  3. பின்பு பச்சைப் பயறுடன் வேக வைத்த காய்கறிகள், பச்சைப் பட்டாணி, சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, பிரேட் தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து , பின் அந்த கலவையை கிளீன் விராப்பின்னால் சுற்றி 15 (அ) 20 நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.. 20 நிமிடம் களித்து வெளியே எடுத்து அதனை சின்னச் சின்ன கட்லெட்டுகளாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
  4. மாவை கரைத்து வைத்து கொள்ளளவும் , கட்லெட்டை மாவில் முக்கI பின்பிரட் தூலில் பிரட்டி எடுக்கவும்.
  5. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டு, தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமானதும் எடுத்து, அதன்மேல் சாட் மசாலாவை லேசாகத் தூவினால் சுவையான கட்லெட் தயார்.
  6. தக்காளி சாசுடன் பரிமரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்