வீடு / சமையல் குறிப்பு / ஈஸ்ட், முட்டையற்ற இன்ஸ்டன்ட் நாண்

Photo of Yeastless and eggless healthy instant naan by Nur Aishah Vimala at BetterButter
413
2
0.0(0)
0

ஈஸ்ட், முட்டையற்ற இன்ஸ்டன்ட் நாண்

Jan-30-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஈஸ்ட், முட்டையற்ற இன்ஸ்டன்ட் நாண் செய்முறை பற்றி

30 நிமிடங்களில் தயார் பண்ண கூடிய இன்ஸ்டன் சைவ நாண். தண்டூர் அல்லாமல் கேஸ் அடுப்பில் வாணலியில் செய்யமுடியும்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா 2 கப்
  2. ஆட்டா 1/2 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. நீர் 1/4 கப்
  5. எண்ணெய் 1 மே. கரண்டி
  6. சோடா உப்பு 1 தே. கரண்டி
  7. உப்பு 1 தே. கரண்டி
  8. சக்கரை 1 தே. கரண்டி
  9. கருப்பு எள் தே. அளவு
  10. உருகிய வெண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, ஆட்டா, சோடா உப்பு, சக்கரை, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துக்கொள்ளவும்.
  2. ஒரு கோப்பையில் தயிர், நீர் மற்றும் எண்ணெய்யை கலந்துக்கொள்ளவும்
  3. தயிர் கலவையை சிறிது சிறிதாக மாவு கலவையில் சேர்த்து நன்றாக பிசையவும். பிசைந்த மாவு மிகவும் காய்ந்து இருந்தால் சிறிது நீர் தெளித்து பிசையவும். அப்படி மிகவும் ஈரமாக இருந்தால் சிறிது மாவு சேர்த்துக்கொள்ளலாம்
  4. மாவை மென்மையாகவும் மிருதுவாகவும் வரும் வரை சில நிமிடங்களுக்கு பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி 20 நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கவும்
  5. தட்டையான நோன் ஸ்டிக் பான் அல்லது தாவாவை அடுப்பில் வைத்து சூடேற்றிக்கொள்ளவும்.
  6. அதே நேரத்தில் ஒதுக்கி வைத்த மாவை சப்பாத்தியை விட சிறிது பிரிய அளவு உருண்டையாக எடுத்து 1/4 அங்குலம் மொத்தத்தில் தேய்த்துக்கொள்ளவும். அதிகமாக அளுத்தத்தேவை இல்லை. தேவை என்றால் சிறிது மாவு தடவிக்கொள்ளலாம்.
  7. தேய்த்த மாவின் மேல் பகுதியில் சிறிது நீர் தடவி அதிர் கருப்பு எள்ளை தூவி அவை நன்கு ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்திக்கொள்ளவும். அதன் பின் புறத்திலும் நீர் தடவி கொள்ளவும்
  8. எள் இல்லாதபுறத்தை தாவாவில் வைத்து உடனடியாக மூடி விடவும். நான் உப்பி வரும்வரை ஏறக்குறைய 45 விநாடிகள் கழித்து திருப்பி போட்டு 30 விநாடிகள் வேக வைத்து எடுக்கவும்
  9. உடனடியாக உருகிய வெண்ணெய் தடவி சூடாக பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்