வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு சீக் கபாப்கள்

Photo of Potato Seekh Kebabs by Hameed Nooh at BetterButter
258
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு சீக் கபாப்கள்

Jan-30-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு சீக் கபாப்கள் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கை அவித்து மசாலா பொருட்கள் சேர்த்து கபாப் குச்சிகளில் வைத்து தணலில் வாட்டி தயாரிக்கும் பதார்த்தம்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிரில்லிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
  2. பிரட் துண்டுகள் - 2
  3. முட்டையின் வெள்ளைக்கரு - 1
  4. மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  5. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  7. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
  8. மயோனைஸ் - 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவையான அளவு
  10. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  11. பச்சை மிளகாய் - 1

வழிமுறைகள்

  1. முதலில் உருளைக்கிழங்கை அவித்து சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும்.
  2. பிறகு அதோடு ப்ரட் துண்டுகள் மிளகாய் தூள் மிளகுத்தூள் அரிசி மாவு கரம் மசாலா முட்டையின் வெள்ளை கரு மயோனைஸ் நறுக்கிய பச்சை மிளகாய் மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
  3. பிறகு அதனை கபாப் குச்சிகளின் மீது நல்ல இறுக்கமாக சுற்றவும்.
  4. ஒரு தவாவை எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கபாப்களை வாட்டவும்.
  5. ஒரு பக்கம் பொறிந்ததும் மற்ற பக்கத்தை திருப்பிப் போடவும்.
  6. எல்லா பக்கங்களும் நன்கு பொறிந்து பொன்னிறமாக ஆனதும் சூடாக சாஸுடன் சாப்பிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்