வீடு / சமையல் குறிப்பு / சீஸ் மற்றும் மசாலாக் கலவை அடைத்த உருளைக் கிழங்கு கிண்ணங்கள்.

Photo of Cheesy masala stuffed potato bowls. by Rabia Hamnah at BetterButter
409
4
0.0(0)
0

சீஸ் மற்றும் மசாலாக் கலவை அடைத்த உருளைக் கிழங்கு கிண்ணங்கள்.

Jan-30-2018
Rabia Hamnah
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸ் மற்றும் மசாலாக் கலவை அடைத்த உருளைக் கிழங்கு கிண்ணங்கள். செய்முறை பற்றி

சீஸின் சுவையும், மசாலாக் ககலவையும் சேர்ந்த கிழங்கு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக் கிழங்கு -3
  2. வெங்காயம் -1
  3. மிளகாய் -1
  4. இஞ்சி பூண்டு விழுது-1/2 ஸ்பூன்
  5. துருவிய சீஸ்-2 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு- தேவைக்கு
  7. மல்லி இலை- 1கைப்பிடி
  8. மிளகாய் தூள்- 2ஸ்பூன்
  9. கரம் மசாலா-1/4 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  11. எண்ணெய்- தேவைக்கு

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை மேலும் கீழும் கொஞ்சமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. பின்பு சிறிய ஸ்பூனைக் கொண்டு ஒரு பக்கம் துளை விடவும்.கிண்ணத்தை போன்று தோற்றமளிக்கும். உப்பு சேர்த்த தண்ணீரில் போடவும்.
  3. பின்பு தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். பாதி வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
  5. பச்சை வாசனை போனதும் துருவி எடுத்த கிழங்கை சேர்க்கவும். பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பின்பு துருவிய சீஸ், மல்லிஇலை சேர்த்து இறக்கி ஆற விடவும்.
  7. கிழங்கு கிண்ணங்களை எடுத்து உள்ளே வதக்கிய கலவையை வைத்து தனியே வைக்கவும்.
  8. கடாயில் எண்ணெய் சேர்க்கவும். சூடானதும் அடைத்த உருளைக் கிண்ணங்களை சலோ ஃப்ரை செய்யவும்.
  9. குறைந்த தணலில் வைத்து பொண்ணிறம் ஆகும் வரை பொறித்தெடுக்கவும்.
  10. சுவையான மசாலாக் கலவை அடைத்த உருளைக் கிழங்கு கிண்ணங்கள் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்