வீடு / சமையல் குறிப்பு / ஐங்காயப் பொடி

Photo of Angaya podi by Sowmya Sundar at BetterButter
2877
5
0.0(0)
0

ஐங்காயப் பொடி

Jan-31-2018
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஐங்காயப் பொடி செய்முறை பற்றி

இந்த பாரம்பரியமான பொடி ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர வயிற்று உபாதைகள் எதுவும் வராது. தாய்மார்களுக்கு மிகவும் அவசியமான பொடி வகை இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேப்பம்பூ -1/2 கப்
  2. மணத்தக்காளி வற்றல் -1/2 கப்
  3. சுண்டைக்காய் வற்றல் -1/2 கப்
  4. துவரம் பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
  5. மல்லி விதை -2 டீஸ்பூன்
  6. மிளகு -1 டீஸ்பூன்
  7. சீரகம் -1 டீஸ்பூன்
  8. கடுகு -1 டீ ஸ்பூன்
  9. மிளகாய் வற்றல் -5
  10. சுக்கு -1 துண்டு
  11. ஓமம் -1 டீஸ்பூன்
  12. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கடாயில் கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக நன்றாக சிவக்க வறுத்து கொள்ளவும் .வெறும் வாணலியில் வறுக்கவும்.
  2. மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
  3. காற்று புகாத பாட்டிலில் வைத்து உபயோகிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்