மட்டன் குருமா | Mutton Korma in Tamil

எழுதியவர் Aameena Ahmed  |  17th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mutton Korma by Aameena Ahmed at BetterButter
மட்டன் குருமாAameena Ahmed
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1561

0

மட்டன் குருமா recipe

மட்டன் குருமா தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton Korma in Tamil )

  • கரம் மசாலா தூள் - 1/2 டீக்கரண்டி
  • பச்சை கொத்தமல்லி - ஒரு கையளவு நன்றாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  • பிரவுன் வெங்காயம் - ஒரு கையளவு ( நொறுக்கியது )
  • அலங்கரித்திற்கு
  • சீரகத்தூள் 1 டீக்கரண்டி
  • கொத்தமல்லித் தூள் - 1 டீக்கரண்டி
  • தண்ணீர்- 2 கப்
  • கிராம்பு - 4
  • இலவங்கம் 4 சிறிய அளவு
  • காய்ந்த ஏலக்காய் - 1
  • பச்சை ஏலக்காய் 4
  • முழு கரம் மசாலா
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • வெங்காயம் - 3 முதல் 4 நடுத்தர அளவு ( விழுது செய்வதற்கு )
  • எண்ணெய் - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 3-4 வெட்டியது
  • உலர்ந்த தேங்காய் தூள் - 4 தேக்கரண்டி
  • தக்காளி விழுது 1/2 கப்
  • சுவைக்கேற்ப உப்பு
  • காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் - 2 டீக்கரண்டி
  • மஞ்சள்தூள்- 1/4 டீக்கரண்டி
  • தயிர் - 1/2 கப் அடித்தது
  • மட்டன் - 500 கிராம்

மட்டன் குருமா செய்வது எப்படி | How to make Mutton Korma in Tamil

  1. கடாயை எடுத்து, ஒரு டீக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதனை ஆறவைத்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  2. இப்போது ப்ரஷர் குக்கரில் எண்ணெயை சேர்க்கவும், பின்னர் முழு கரம் மசாலாவை சேர்க்கவும்.
  3. அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும் பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அதன் பிறகு மட்டன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் மற்றும் உலர்ந்த தேங்காய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொண்டு பின்பு தயிர் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  5. பின்பு உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொழுப்பு பிரிக்கிற வரை வதக்கவும்.
  6. இப்போது தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 3 விசில் விடவும் அல்லது சாதாரண கடாயில் சமைத்தால் லேசான தீயில் மட்டன் கொழுப்பு கரையும் வரை வேகவிடவும்.
  7. நீங்கள் இப்போது தேவைக்கேற்ப கெட்டி தன்மையை சரி செய்துக் கொள்ளலாம்.
  8. இப்போது அனைத்தையும் அலங்கரித்து 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் சூடாக பரிமாறவும்.

எனது டிப்:

மூன்று விசிலில் மட்டன் வேகவில்லை எனில் மூடியைக் கொண்டு மூடி மேலும் சில விசில்கள் விடவும். தக்காளி விழுதுக்கு நீங்கள் கடையில் வாங்கிய தக்காளி விழுதையோ அல்லது புதிய தக்காளியையோ வாங்கிக் கொள்ளலாம். நீங்கள் புதிய தக்காளி கூழ் பயன்படுத்தினால், நீங்கள் நான்கு நடுத்தர அளவு தக்காளி பயன்படுத்தலாம்.

Reviews for Mutton Korma in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.