வெஜிடபிள் தம் பிரியாணி | Vegetable Dum Biryani in Tamil

எழுதியவர் Aameena Ahmed  |  17th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Vegetable Dum Biryani by Aameena Ahmed at BetterButter
வெஜிடபிள் தம் பிரியாணிAameena Ahmed
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4544

0

வெஜிடபிள் தம் பிரியாணி recipe

வெஜிடபிள் தம் பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Vegetable Dum Biryani in Tamil )

 • உருளைக்கிழங்கு 1 கப் கனசதுரமாக நறுக்கியது
 • கேரட் 1 கப் சிறிய துண்டுகள்
 • பச்சை பட்டாணி 1 கப்
 • பச்சைப் பட்டாணி 1 கப்
 • காலிபிளவர் 1 கப்
 • எண்ணெய் 1/2 கப்
 • பழுப்பு வெங்காயம் 1 கப்
 • (அலங்கரிப்பதற்காக கையளவு வைத்துக்கொள்ளவும்)
 • இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
 • சிவப்பு மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் 3/4 தேக்கரண்டி
 • உப்பு சுவைக்கேற்ற அளவு
 • பச்சை ஏலக்காய் 5
 • இலவங்கப்பட்டை சிறிய அளவிலானது 1 துண்டு
 • கிராம்பு 5
 • ஷாஹி சீரகம் 1/4 தேக்கரண்டி
 • பச்சை மல்லி 1/2 கப்
 • புதினா இலை பாதி கப்பைவிடச் சற்றுக் குறைவாக
 • எலுமிச்சை சாறு 1 பெரிய எலுமிச்சை அளவு
 • தயிர் 1/2 கப்
 • கரம் மசாலா தூள் 1/2 கப்
 • புதிய பச்சை மிளகாய் சாந்து 1 தேக்கரண்டி
 • முழு பச்சை மிளகாய் 6-7
 • மல்லித்தூள் 1 தேக்கரண்டி
 • சீரகத்தூள் 3/4 தேக்கரண்டி
 • அரிசி
 • பாஸ்மதி அரிசி 4 கப்
 • பச்சை ஏலக்காய் 5
 • ஷாஹி சீரகம் 1 தேக்கரண்டி
 • இலவங்கப்பட்டை 5 சிறிய துண்டுகள்
 • கிராம்பு 5
 • உப்பு சுவைக்கேற்ற அளவு
 • அலங்கரிக்க
 • ஒரு சிறிய கப்பில் 1/4 பங்கு பால் எடுத்து கொஞ்சம் குங்குமப்பூ சேர்க்கவும்
 • தாள்கள் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமி
 • பிரியாணியின் மேற்பகுதியை அலங்கரிக்க இதைப் பயன்படுத்தவும்.
 • கொஞ்சம் புதினா இலைகள்
 • ஒன்றிரண்டு தேக்கரண்டி நெய்
 • கொஞ்சம் வறுத்த வெங்காயம்

வெஜிடபிள் தம் பிரியாணி செய்வது எப்படி | How to make Vegetable Dum Biryani in Tamil

 1. அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
 2. ஒன்றறைத் தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி ஒவ்வொரு காய்கறியையும் தனித்தனியே ஒன்றல்லது இரண்டு நிமிடங்கள் வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
 3. சேர்வைப்பொருள்களின் கீழ் உள்ள அனைத்துப் பொருள்களையும் வறுத்த காய்கறிகளில் சேர்த்து நன்றாகக் கலந்து 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
 4. இப்போது காலிபிளவர் துண்டுகளை நீக்கி ஒட்டுமொத்த்க கலவையையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து காய்கறிகள் முக்கால் பகுதி வேகும்வரை வேகவைத்து காலிபிளவர் பூக்களைச் சேர்த்து வேகும்வரை வேகவைத்து எடுத்து வைக்கவும்.
 5. ஒரு தனி பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரை உப்பு, சாதத்திற்குக் கீழ் வழங்கப்பட்டுள்ள கரம் மசாலா முழுவதையும் போட்டு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரிசியைச் சேர்த்து முக்கால் பகுதி வெந்ததும் ஒரு சல்லடையால் வடிக்கட்டிக்கொள்ளவும்.
 6. இப்போது ஒரு லாகனை (பாத்திரம்) எடுத்தி நெய் தடவி பாதி அரிசியை அடுக்கி அதன் மீது காய்கறி பிறகு மீதமுள்ள அரிசியை அடுக்கவும்.
 7. பாத்திரத்தின் அடிப்பாகத்தை அடையும் வரை கரண்டியால் கிண்டி ஓட்டை போடவும். இப்போது அலங்கரிப்புக்குக் கீழ் உள்ள அனைத்தையும் சேர்க்கவும்.
 8. லாகனை அலுமினியத் தாளால் சீல் செய்து மூடவும். முடியில் கொஞ்சம் எடையை ஏற்றி உயர் தீயில் 5 நிமிடத்திற்கு சிம்மில் 10 நிமிடம் வைத்து அடுப்பை நிறுத்தவும். உணவை 15 நிமிடத்திற்கு விட்டுவைத்து அதன்பின் கனவமானக் கிளரவும். பரிமாறுவதற்குத் தயார்.

எனது டிப்:

• இந்தியா கேட் பாஸ்மதி அரிசி சிறப்பான பிரியாணி செய்வதற்கு உகந்தது. • உணவுக் குறிப்பில் நீங்கள் வெங்காயத்தை வறுப்பதற்குப் பயன்படுத்தும் அதே எண்ணெயைப் பயன்படுத்தவும். • பிரியாணி அடுக்குகளில் ஓட்டையிடுவது மிகவும் அவசியம், ஏனெனில் ஆவி வெளியேறி பிரியாணியைச் சுவை மிகுந்ததாகச் செய்கிறது!! • அலங்கரிப்பதற்காகப் பன்னீர் தண்ணீரைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். • சேர்வைப்பொருள்களில் காய்கறிகளை வறுப்பதற்கான எண்ணெய் குறிப்பிடப்படவில்லை.

Reviews for Vegetable Dum Biryani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.