வீடு / சமையல் குறிப்பு / உடனடி வெந்தய மாங்காய் ஊறுகாய்

Photo of Instant Vendhaya Mango pickle by Sowmya Sundar at BetterButter
1103
5
0.0(0)
0

உடனடி வெந்தய மாங்காய் ஊறுகாய்

Feb-01-2018
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

உடனடி வெந்தய மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

ஊறுகாய் என்றாலே வெகு நாள் எடுத்து செய்யக்கூடியது..உடனடியாக செய்து உபயோகிக்க கூடிய ஒரு ருசியான ஊறுகாய் இது .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை மாங்காய் -1
  2. உப்பு-2 டீஸ்பூன்
  3. மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
  4. மிளகாய் தூள்-3 டீஸ்பூன்
  5. வெந்தயம் -1/2 டீஸ்பூன்
  6. கடுகு -1டீஸ்பூன்
  7. நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  8. பெருங்காயம் பொடி -1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாங்காயை கழுவி துடைத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. அதனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும்
  3. கடாயில் வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
  4. அதே கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் மிளகாய் பொடி, பெருங்காயம் ,வெந்தய பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து மாங்காயில் கொட்டி நன்றாக கிளறவும்.
  5. சுவையான உடனே சாப்பிட கூடிய ஊறுகாய் தயார். மறுநாள் ஊறி இன்னும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்