வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை மருந்து சட்னி

Photo of Pirandai marundu chutney by Krishnasamy Vidya Valli at BetterButter
490
4
0.0(0)
0

பிரண்டை மருந்து சட்னி

Feb-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை மருந்து சட்னி செய்முறை பற்றி

பிரண்டை வயிற்றிற்கு மிகவும் நல்லது. சரியாக வதக்கவில்லை என்றால் சாப்பிடும்போது அரிக்கும். வீடுகளில் ஒரு தொட்டியில் வைத்தால் நல்ல இளம் பிரண்டையாக பறித்து அடிக்கடி வயிற்றிற்கு நல்லதான இந்த சட்னி செய்யலாம். இதில் சேர்க்கப்படும் பொருட்களும் ஆரோக்கியமானதே

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இளம் பிரண்டை - ஒரு கையளவு
  2. இஞ்சி - 1 சிறிய துண்டு
  3. புளிகரைசல் -1/2 தேக்கரண்டி
  4. உப்பு - 1/4 தேக்கரண்டி
  5. வெல்லம்- 1 சிறிய துண்டு
  6. கருவேப்பிலை-2ஆர்க்கு
  7. எண்ணெய்-1/2 தேக்கரண்டி
  8. வறுக்க
  9. எண்ணெய் -2டிராப்ஸ்
  10. எள்ளு - 1/2 தேக்கரண்டி
  11. உளுத்தம் பருப்பு- 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இளம் பிரண்டையாக எடுத்துக் கொள்ளவும்
  2. நார் இல்லாமல் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி நறுக்கிக்கொள்ளவும்
  3. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  4. நன்றாக பிரண்டை மற்றும் இஞ்சியை கருவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
  5. கலர் மாறும் வரை வதக்கவும்
  6. உப்பு புளி வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்