வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint chutney by Adaikkammai Annamalai at BetterButter
576
8
0.0(0)
0

புதினா சட்னி

Feb-01-2018
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. புதினாக் கீரையைத் துவையலாகவோ, சட்னியாகவோ பயன்படுத்தினால் புதினாவின் பொதுக்குணங்கள் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடுகிறது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 2
  3. பச்சைமிளகாய் - 5
  4. புதினா - 1 கொத்து
  5. உப்பு - தேவையான அளவு
  6. சீனி - சிறிது ( சேர்த்தால்,வதக்கும் பொழுது பச்சை நிறம் மாறாமல் இருக்கும்)

வழிமுறைகள்

  1. தேவையான பொருளை எடுத்துக்கொள்ளவும்,, வெங்காயம்,, தக்காளி,, பச்சைமிளகாய்., புதினா.., நறுக்கி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு இருப்பு சட்டியில் எண்ணெய் சேர்த்து உளுந்து போட்டு தாளித்து வெங்காயம்,, தக்காளி .., பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. சிறிது உப்பு, சர்க்கரை போட்டு வதக்கவும்.
  4. பொன்னிறமாக வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்த புதினாவை சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக சுருங்கும் வரை வதக்கவும்
  6. வதங்கியவுடன் எடுத்து ஆற வைக்கவும் சிறிது நேரம்
  7. சிறிது நேர்ம் கழித்து அதை மிக்ஸ்யில் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்
  8. ஒரு இருப்பு சட்டியில் எண்ணெயை காய வைத்து கடுகு, உளுந்து, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்
  9. தாளித்து அரைத்த விழு்தில் சேர்க்கவும்
  10. சுவையான புதினா சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்