வீடு / சமையல் குறிப்பு / கலந்த காய்கறி ஊறுகாய்

Photo of Mixed Vegetable Pickle by Menaga Sathia at BetterButter
277
4
0.0(0)
0

கலந்த காய்கறி ஊறுகாய்

Feb-01-2018
Menaga Sathia
2895 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

கலந்த காய்கறி ஊறுகாய் செய்முறை பற்றி

கலந்த காய்கறி காரசாரமாகவும் சுவையாகவும் இருக்கும்.அனௌத்து காய்களும் இருந்தால் உடனடியாக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. காய்கறி கலவை-4 கப்(மிக பொடியாக நறுக்கியது)
  2. வெள்ளை வினிகர்-1/3 கப்
  3. நல்லெண்ணெய்-1/2 கப்+2டேபிள்ஸ்பூன்
  4. கல் உப்பு - 1/4 கப் +2 டேபிள்ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய்தூள்-3 டேபிள்ஸ்பூன்
  6. மஞ்சள்தூள்-1டீஸ்பூன்
  7. வறுத்த வெந்தயப்பொடி-1/2 டீஸ்பூன்
  8. தாளிக்க
  9. கடுகு-3/4 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை-2டேபிள்ஸ்பூன் (பொடியாக் நறுக்கியது)
  11. பெருங்காயப்பொடி-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் காய்களை நன்கு கழுவி ஈரம் போக துடைத்து 1 மணிநேரம் உலர்த்தவும் பின் பொடியாக நறுக்கவும்.
  2. நான் சேர்த்திருக்கும் காய்கள் சின்ன வெங்காயம்,கேரட்,காலிபிள்வர்,மாங்காய்,மிதி பாகற்காய்,எலுமிச்சைபழம்,பூண்டு,இஞ்சி,பச்சைமிளகாய்,அவரைக்காய்,பச்சை சுண்டைக்காய்.
  3. இவற்றில் பச்சை சுண்டைக்காயை நசுக்கியும்,பூண்டு,வெங்காயம் முழுதாகவும் மற்ற காய்களை பொடியாக நறுக்கியும் சேர்க்கவும்.
  4. ஒரு பவுலில் நறுக்கிய காய்கள்,மஞ்சள்தூள்,மிளகாய்தூள்,உப்பு,வினிகர்,1/2 கப் நல்லெண்ணெய் ,வெந்தயபொடி இவற்றை சேர்த்து கலக்கவும்
  5. கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி தாளிக்க் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து ஊறுகாயில் சேர்க்கவும்
  6. 2நாள் நன்றாக ஊறியதும் பயன்படுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்