வீடு / சமையல் குறிப்பு / முழு எலுமிச்சை அடை ஊறுகாய்

Photo of Lemon Adai pickle by Hameed Nooh at BetterButter
966
7
0.0(0)
0

முழு எலுமிச்சை அடை ஊறுகாய்

Feb-02-2018
Hameed Nooh
21600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முழு எலுமிச்சை அடை ஊறுகாய் செய்முறை பற்றி

முழு எலுமிச்சை பழத்தை உப்பு மற்றும் தேங்காய் தண்ணீரோடு வெயிலில் ஊற வைத்து தயாரிக்கும் மிகவும் சுவையான ஊறுகாய். பழம் மலிவாக கிடைக்கும் போது 40 50 பழங்கள் வாங்கி இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • பிக்கிலிங்
  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. எலுமிச்சை பழம் - 10
  2. கல் உப்பு - 1/2 கப்
  3. தேங்காய் தண்ணீர் - 1 கப்

வழிமுறைகள்

  1. எலுமிச்சை பழத்தை சுத்தப்படுத்தி நான்கு பாகங்களாக வெட்டிக் கொள்ளவும். முழுவதுமாக வெட்டக்கூடாது.
  2. பிறகு கல் உப்பை அதன் உள்ளே வைத்து நன்றாக அழுத்தி மூடவும்.
  3. அதனை ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு தேங்காய் தண்ணீர் சேர்த்து வெயிலில் வைக்கவும்.
  4. இவ்வாறாக மூன்று நாட்கள் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து காய விடவும்.
  5. மூன்று நாட்கள் கழித்து நிறம் மாறியதும் வீட்டினுள்ளே பதினைந்து முதல் ஒரு மாதம் வரை தினமும் கண்ணாடி குடுவையை நன்றாக அசைத்து வைக்கவும்.
  6. பழங்கள் நன்றாக இற்றுப் போய் ஊறுகாயில் திரவம் போல் கெட்டியாக வந்ததும் பயன்படுத்தவும்.
  7. பிறகு இதனையே எண்ணெயில் தாளித்து மசாலா பொருட்கள் சேர்த்தும் காரமான எலுமிச்சை ஊறுகாய் செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்