முட்டை சேர்க்காத பிளாக் பாரஸ்ட் கேக் | Eggless Black Forest Cake in Tamil

எழுதியவர் Deviyani Srivastava  |  19th Feb 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Eggless Black Forest Cake by Deviyani Srivastava at BetterButter
முட்டை சேர்க்காத பிளாக் பாரஸ்ட் கேக்Deviyani Srivastava
 • ஆயத்த நேரம்

  50

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  35

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

6550

1

முட்டை சேர்க்காத பிளாக் பாரஸ்ட் கேக் recipe

முட்டை சேர்க்காத பிளாக் பாரஸ்ட் கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Eggless Black Forest Cake in Tamil )

 • முட்டையில்லா சாக்லேட் கேக்:
 • 1 கப் முழு கோதுமை மாவு
 • 3 தேக்கரண்டி கோகோ பவுடர்
 • 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
 • ஒரு சிட்டிகை உப்பு
 • 3/4 கப் சர்க்கரை
 • 1 கப் குளிர்ந்த நீர்
 • 1/4 கப் எண்ணெய்
 • 1/2 தேக்கரண்டி வெண்ணிலா சாறு
 • 1 எலுமிச்சையின் சாறு (1 தேக்கரண்டி)
 • ஐசிங்கிற்கு:
 • 200 மிலி குளிர்ச்சியான புதிய அமுல் கிரீம்
 • 5 தேக்கரண்டி ஐசிங் சர்க்கரை
 • 3 தேக்கரண்டி நறுக்கிய சிவப்பு செர்ரிக்கள்
 • 7ல் இருந்து 8 தேக்கரண்டி சாக்லேட் துருவல்
 • அலங்காரத்திற்கு முழு செர்ரிகள்

முட்டை சேர்க்காத பிளாக் பாரஸ்ட் கேக் செய்வது எப்படி | How to make Eggless Black Forest Cake in Tamil

 1. வட்டமான ஒரு பேக்கிங் பாத்திரத்தில் எண்ணெய் தடவி 200 டிகிரி செல்சியசில் உங்கள் ஓவனை ப்ரீ ஹீட் செய்யவும்.
 2. முழு கோதுமை மாவைச் சலித்து, கோகோ பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
 3. இன்னொரு பாத்திரத்தில் 3/4 கப் சர்க்கரை, 1 கப் குளிர்ந்த நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும். 1/4 கப் எண்ணெய் சேர்த்து வேகமாகக் கலக்கவும். எல்லாம் நன்றாக கலந்துகொள்ளும் விதத்தில்.
 4. 1 எலுமிச்சையின் சாறை 1/2 தேக்கரண்டி வெண்ணிலா சாறோடு எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 5. சலித்த உலர் பொருள்களை ஈரப்பதமுள்ள கலவையில் சேர்க்கவும். கேக் மாவில் கட்டிகள் ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அடித்துக்கொள்ளவும்.
 6. தயாரித்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் கேக் மாவை ஊற்றவும். ப்ரீ ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 35ல் இருந்து 40 நிமிடங்கள் கேக்கை பேக் செய்யவும். ஒரு பல்குத்தும் குச்சியை நடுவில் நுழைத்துப்பார்க்கவும். சுத்தமாக வெளியே வந்தால் உங்கள் கேக் தயார். முழுமையாக ஆறவிடவும்.
 7. ஆறியதும், கவனமாக கேக்கை 3 அடுக்குகளாகத் துண்டுபோட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
 8. கிரீமையும் ஐசிங் சர்க்கரையையும் கூராக கூம்புகள் பெறும்வரை அடித்துக்கொள்ளவும். கேக் மீது சமமாகக் கொஞ்சம் சர்க்கரையைத் தூவிக்கொள்ளவும் (அடித்தள அடுக்கு), கொஞ்சம் கிரீமை மேலே சேர்க்கவும். நறுக்கிய செர்ரிகளில் கொஞ்சம் எடுத்து தூவி இரண்டாவது கேக் அடுக்கை வைக்கவும்.
 9. இரண்டாவது கேக் அடுக்கை மீண்டும் செய்து இறுதியாக அடித்து வைத்துள்ள கிரீமால் மேலே வைத்து, பக்கங்களையும் மூடுக.
 10. பக்கங்களிலும் கேக்கின் நடுவிலும் சாக்லேட் துண்டுகளைத் தூவி முழு செர்ரிக்களால் அலங்கரிக்கவும்.

Reviews for Eggless Black Forest Cake in tamil (1)

Dekila Vinothkumara year ago

Yummy
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.