வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மசாலா புர்ஜி

Photo of Paneer spicy burji by Sumathi Anand at BetterButter
1904
223
4.0(0)
0

பன்னீர் மசாலா புர்ஜி

Feb-19-2016
Sumathi Anand
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • மெக்ஸிகன்
  • பான் பிரை
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 200 கிராம் பன்னீர் - பொடிசெய்யப்பட்டது / துருவியது
  2. 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 3/4 தேக்கரண்டி சீரகம்
  4. 2 நடுத்தர அளவுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கியது
  5. 1 இன்ச் இஞ்சி, துருவியது
  6. 4-5 சிறிய அளவிலானத் தக்காளி, நறுக்கியது
  7. 1 சிறிய பச்சை மணி மிளகு, பொடியாக நறுக்கியது
  8. கரம் மசாலா பவுடர்
  9. 1/4 மஞ்சள் தூள்
  10. 1 தேக்கரண்டி உப்பு, அல்லது சுவைக்கேற்ற அளவு
  11. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  12. 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  13. 2 தேக்கரண்டி பால்
  14. 2 தேக்கரண்டி கொத்துமல்லி, பொடியாக நறுக்கியது
  15. சுவைக்காக எலுமிச்சை சாறு

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்துக. சூடனதும் சீரகம் சேர்த்து வெடிக்கவிடவும். வெங்காயம், இஞ்சி சேர்த்து வெங்காயம் பழுப்பாகும்வரை வதக்கவும், 3-4 நிமிடங்களுக்கு. தக்காளி மணி மிளகு சேர்த்து காய்கறிகள் மென்மையாக ஆனால் மொறுமொறுப்பாகவும் இருக்கும்வரை வதக்கவும்.
  2. அடுத்து மசாலா பவுடரை உப்போடு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். மசாலா பவுடரின் பச்சை வாடை போகும்வரை சமைக்கவும். 2 தேக்கரண்டி பால் சேர்த்து 2-3 நிமிடங்கள் ஒட்டுமொத்தக் கலவையும் ஒன்றாகும்வரை சமைக்கவும்.
  3. துருவிய பன்னீர், கொத்துமல்லி சேர்த்து ஒரு கலக்குக் கலக்கிக்கொள்ளவும். 3- நிமிடங்கள் மிதமாக வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்