வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய சத்துமாவுப்பொடி.

Photo of Multi grain healthmix powder by Rajee Swaminathan at BetterButter
464
5
0.0(0)
0

சிறுதானிய சத்துமாவுப்பொடி.

Feb-03-2018
Rajee Swaminathan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய சத்துமாவுப்பொடி. செய்முறை பற்றி

பொடி மற்றும் சட்னி வகைப்போட்டி 10

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கம்பு 50 கி
  2. கேப்பை 50 கி
  3. சோளம் 50 கி
  4. வரகு 50 கி
  5. சாமை 50 கி
  6. தினை 50 கி
  7. மாப்பிள்ளை சம்பா 50 கி
  8. கவுனி அரிசி 50 கி
  9. சம்பா கோதுமை 50 கி
  10. மூங்கில் அரிசி 50 கி
  11. பார்லி 50 கி
  12. ஜவ்வரிசி 50 கி
  13. பொரிகடலை 50 கி
  14. நிலக்கடலை 50 கி
  15. சிறு பயிறு 50 கி
  16. கொண்டைக்கடலை 50 கி
  17. கருப்பு உளுந்து 50 கி
  18. கொள்ளு 50 கி
  19. சோயா 50 கி
  20. பட்டாணி 50 கி
  21. மொச்சை 50 கி
  22. பாதாம் 10 கி
  23. முந்திரி 10 கி
  24. ஏலக்காய் 10 கி
  25. சுக்கு 50 கி

வழிமுறைகள்

  1. பாதாம், முந்திரி தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும்.
  2. சுக்கை நன்றாக தட்டவும்
  3. சுக்கு மற்றும் ஏலம் இவற்றை லேசாக வறுக்கவும்.
  4. முந்திரி மற்றும் பாதாமை வறுக்க தேவையில்லை.
  5. பின் அனைத்தையும் மாவாக திரித்து வைக்கவும்.
  6. சுவையான சத்துமாவுப்பொடி ரெடி.
  7. தினமும் இதில் 2 டீஸ்பூன் போட்டு நாட்டு வெல்லம் போட்டு 2 டம்ளர் நீர்விட்டு கரைத்து காய்ச்சவும்.
  8. கூழ் பதம் வந்தவுடன் இறக்கி பால் விட்டு அருந்தவும்.
  9. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான காலை உணவாகும்.
  10. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த லோகிளைசமிக் கொண்ட சத்து பானமாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்