Photo of Sweet Samosa by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
2740
4
0.0(1)
0

Sweet Samosa

Feb-03-2018
Wajithajasmine Raja mohamed sait
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1/2 கிலோ
  2. ரவை -1 தேக்கரண்டி
  3. வெண்ணெய் - 50 கிராம்
  4. உப்பு - தேவையான அளவு
  5. பூரணம் செய்ய தேவையானவை
  6. தேங்காய் -1/2 முடி
  7. சர்க்கரை - 100 கிராம்
  8. கசகசா -2 தேக்கரண்டி
  9. பொரிகடலை - 100 கிராம்
  10. முந்திரி ,பாதாம் ,பிஸ்தா - சிறிதளவு
  11. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  12. நெய் - சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் மைதாமாவுடன் காய்ச்சிய வெண்ணெய் , உப்பு,ரவை சேர்த்து தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்த வைக்க வேண்டும் .
  2. பூரணம் செய்ய ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் உற்றி அதனுடன் துருவிய தேங்காய் போட்டு நன்கு வதக்க வேண்டும் .(நிறம் மாறும் வரை).
  3. பொரிகடலையை மிக்சியில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும் .
  4. பாதாம் ,முந்திரி ,பிஸ்தா மூன்றையும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் .
  5. இப்பொழுது தேங்காய்,அரைத்த பொரிகடலை ,பாதம் ,முந்திரி ,பிஸ்தா அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதனுடன் சர்க்கரை மற்றும் கசகசா சேர்த்து பூரணம் தயார் செய்து வைக்க வேண்டும் .
  6. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரி போல வட்டமாக பரத்திக்கொள்ள வேண்டும் .
  7. சிறிதளவு பூரணத்தை மாவின் நடுவில் வைத்து மடித்துக்கு கொள்ள வேண்டும் .
  8. ஒரு சிறு கரண்டியை வைத்து மடித்த ஓரத்தை நன்கு அழுத்த வேண்டும் (அச்சும் பயன்படுத்தலாம்)
  9. அனைத்து உருண்டைகளையும் இதுபோன்று செய்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் .
  10. கடாயில் பொறிப்பதற்கு தேவையான எண்ணெய் உற்றி பொறித்து எடுக்க வேண்டும் .
  11. சுவையான இனிப்பு சமோசா தயார் ......

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-04-2018
Pushpa Taroor   Feb-04-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்