சிக்கன் ரோல் (கொல்கத்தா வீதி பாணி ) | Chicken Roll (Kolkata Street Style) in Tamil

எழுதியவர் Chandrima Sarkar  |  28th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chicken Roll (Kolkata Street Style) by Chandrima Sarkar at BetterButter
சிக்கன் ரோல் (கொல்கத்தா வீதி பாணி )Chandrima Sarkar
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2979

0

சிக்கன் ரோல் (கொல்கத்தா வீதி பாணி ) recipe

சிக்கன் ரோல் (கொல்கத்தா வீதி பாணி ) தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken Roll (Kolkata Street Style) in Tamil )

 • எலும்பில்லா சிக்கன் - 400கி (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
 • வெங்காயம் - 1 பெரிய அளவு (பொடியாக நறுக்கியது)
 • தக்காளி - 1 (நறுக்கியது)
 • பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
 • மல்லித்தூள் - 1தேக்கரண்டி
 • சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
 • காஷ்மீர் மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
 • கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
 • உப்பு
 • சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • சிக்கன் மேரினேட் செய்வதற்கு - தயிர் - 2 தேக்கரண்டி
 • கருமிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
 • இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • அலங்கரிப்பதற்காக - எலுமிச்சை - 1
 • வெள்ளெரிக்காய் - 1 (தோல் உரித்து வட்டமான நறுக்கிய வெள்ளரிக்காய்)
 • வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கியது)
 • தக்காளி கெச்சப்
 • பச்சை மிளகாய் சாஸ்
 • புதிய கொத்துமல்லி - 1 தேக்கரண்டி (நறுக்கியது)
 • பரோட்டா மாவு/ரோல் மாவுக்காக - அனைத்துக்கமான மாவு/மைதா - 1 மற்றம் 1/2 கப்
 • சமையல் எண்ணெய் - 1தேக்கரண்டி
 • உப்பு - ĵ தேக்கரண்டி
 • மாவைப் பிசைவதற்குத் தேவையானத் தண்ணீர்

சிக்கன் ரோல் (கொல்கத்தா வீதி பாணி ) செய்வது எப்படி | How to make Chicken Roll (Kolkata Street Style) in Tamil

 1. சிக்கனைத் தயார் செய்வதற்கு, கழுவியப் புதிய சிக்கன் துண்டுகளை 'சிக்கனை மேரினேட் செய்வதற்கு'க் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களோடு மேரினேட் செய்து 1 மணி நேரம் அல்லது அதற்கும் மேல் வைக்கவும்.
 2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். நறுக்கியத் தக்காளி, பச்சைமிளகாய் மற்றும் இதர பொருள்கைளயும் கரம் மசாலாவைத் தவிர சேர்க்கவும். கலந்து 2-3 நிமிடங்கள் வேகவைத்து மேரினேட் செய்த சிக்கனைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மூடி சிறு தீயில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். இடையிடையே கலக்கவும். 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
 3. மூடியிட்டு சிக்கன் வேகும்வரை வேகவைக்கவும். இடையிடையே கலக்கவும். சிக்கன் உலர் நிலையில் இருந்தால் கொஞ்சம் கூடுதலாகத் தண்ணீர் தெளிக்கவும். நன்றாக வெந்ததும் கரம் மசாலா தூள் சேர்க்கவும். கலந்து அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைக்கவும்.
 4. மாவையும் பரோட்டாவையும் ஒரு கிண்ணத்தில் ஏற்பாடு செய்ய *பரோட்டா மாவுக்காக* என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்து விரல்களால் நன்றாகக் கலந்துகொள்க. இப்போது தண்ணீரை மெதுவாக நேர்த்து மென்மையான மாவாகப் பிசையவும். 3ல் இருந்து 4 சம அளவுள்ள உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க.
 5. மாவு தூவப்பட்டத் தரையில் ஒவ்வொரு உருண்டையையும் வட்டவடிவ பரோட்டாவாக (வழக்கமான சப்பாத்தி அல்லது ரொட்டியைவிட சற்றே மொத்தமாக இருக்கவேண்டும்)
 6. ஒரு தவாவைச் சூடுபடுத்தி பரோட்டாவை ஒவ்வொன்றாக வேகவைக்கவும். இரண்டு பக்கங்களையும் திருப்பிப்போட்டு எண்ணெய் இல்லாமல் முதலில் வேகவைக்கவும் (ஒட்டுமொத்தமாக ஒரு நிமிடம் வேகவைக்கவும்), இப்போது ஒவ்வொரு பக்கத்திலும் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, பொன்னிறமாகும்வரை திருப்பிப்போட்டு வேகவைக்கவும். அதிகமாகத் திருப்புவதைத் தவிர்க்கவும். பரோட்டா கடினமாகிவிடலாம். அடுப்பிலிருந்து இறக்கி எடுத்து வைக்கவும்.
 7. ரோல் செய்வதற்கு, இப்போது ஒரு சூடான பரோட்டாவின் மீது கொஞ்சம் வேகவைத்த சிக்கன் துண்டுகளை ஒரு வரிசையில் வைக்கவும் (மையத்திலிருந்து வரிசை சற்று வெளியில் இருக்கவேண்டும்). சிக்கன் துண்டுகளில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு தெளித்து, கொஞ்சம் நறுககிய வெங்காயம், வெள்ளரிக்காய், நறுக்கிய கொத்துமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சில துளிகள் தக்காளி கெச்சப், மிளகாய் சாஸ் சேர்க்கவும். பரோட்டாவா இறுக்கமாகச் சுற்றி, உரு பாதியை டிஸ்யூ பேப்பரால் சுற்றவும். டிஸ்யூ பேப்பரின் அடிப்பகுதியை ரோலுக்குள் சொருகவும்.
 8. உங்கள் வீதி பாணியிலான *சிக்கன் ரோல்* உண்பதற்குத் தயார். உண்டு மகிழவும்!

Reviews for Chicken Roll (Kolkata Street Style) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.