காளிபிளவர் 65 (கோபி 65) | Cauliflower 65 (Gobi 65) in Tamil

எழுதியவர் Sindhu Sriram  |  22nd Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Cauliflower 65 (Gobi 65) by Sindhu Sriram at BetterButter
காளிபிளவர் 65 (கோபி 65)Sindhu Sriram
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

1907

0

காளிபிளவர் 65 (கோபி 65) recipe

காளிபிளவர் 65 (கோபி 65) தேவையான பொருட்கள் ( Ingredients to make Cauliflower 65 (Gobi 65) in Tamil )

 • காளிபிளவர் - 1 நடுத்தர அளவுள்ள பூ
 • அடர்த்தியான தயிர் - 1/4 கப்
 • காஷ்மீரி மிளகாய்ப்பொடி - 4 தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
 • உப்பு - சுவைக்கு
 • அரிசி மாவு - 3 தேக்கரண்டி
 • கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
 • எண்ணெய் - பொறிப்பதற்கு

காளிபிளவர் 65 (கோபி 65) செய்வது எப்படி | How to make Cauliflower 65 (Gobi 65) in Tamil

 1. காளிபிளவரசை சுத்தப்படுத்திக் கழுவி, நடுத்தர அளவிலான பூக்களாக நறுக்கிக்கொள்க.
 2. 2 நிமிடங்களுக்கு பூக்களை வெளிறச்செய்து முழுமையாக வடிக்கட்டவும். சமையல் துண்டு ஒன்றால் ஒத்தி உலரவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக.
 3. தயிர், இஞசி, பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த் தூள் பெருஞ்சீரகத் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். பூக்களை நீங்கள் வறுப்பதற்கு முன் இதை நீங்கள் செய்யவேண்டும். முன்னரே கலந்துவைப்பது நன்றாக இருக்காது.
 4. எல்லா தயிர் கலவையையும் பூக்களோடு சேர்க்கவும். சமமாகக் கலக்கவும். அப்போதுதான் பூக்கள் சமமாகப் பூசப்படும். இப்போது அரிசி மாவை இந்தக் கலவையின் மீது தூசி அனைத்துப் பூக்களும் சமமாக பூசப்படுவதை உறுதி செய்க.
 5. மொறுமொறுப்பாகும் வரை பொறிக்கவும்.

எனது டிப்:

சிக்கனுக்கும் இதையே பின்பற்றலாம். எலும்பற்ற கனசதுர சிக்கன் துண்டுகளைப் பயன்படுத்தலாம்.

Reviews for Cauliflower 65 (Gobi 65) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.