கார சட்னி | Spicy Chutney in Tamil

எழுதியவர் Rabia Hamnah  |  4th Feb 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Spicy Chutney by Rabia Hamnah at BetterButter
கார சட்னிRabia Hamnah
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

9

0

8 votes
கார சட்னி recipe

கார சட்னி தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy Chutney in Tamil )

 • நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
 • நறுக்கிய தக்காளி -3
 • காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
 • புளி -அரை நெல்லிக்காயளவு
 • உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
 • கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன
 • உப்பு -தேவைக்கு
 • தாளிக்க‌- எண்ணெய்- 2 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
 • கடுகு+ உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன
 • கறிவேப்பிலை- 1 கொத்து

கார சட்னி செய்வது எப்படி | How to make Spicy Chutney in Tamil

 1. வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.
 2. பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.
 3. மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
 4. பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

எனது டிப்:

அரைக்கும் போது நீர் சேர்க்க தேவையில்லை தேவையெனில் 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கவும்.

Reviews for Spicy Chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.